"வருத்தம் கூறல் அவன் மறுத்து உரைத்தல்
உள்ளது கூறல் ஏதம் கூறல்
பகல்வரல் என்றல் தொழுதுஇரந்து உரைத்தல்
சிறைப்புறம் கூறல் மந்திமேல் வைத்தல்
கண்துயி லாமை கண்டார் உரைத்தல்
பகலுடம் பட்டாள்போன்று இரவரல் என்றல்
இரவுஉடன் பட்டாள்போன்று பகல்வரல் என்றல்
இரவும் பகலும் வரவுஒழிக என்றல்
காலம் கூறல் கூறுவிக் குற்றல்
செலவு கூறல் பொலிவுஅழிவு உரைத்தல் என்று
ஈரெண் கிளவியும் இயம்புங் காலை
வார்அணி முலையாய் வரைவு முடுக்கம்."
திருக்கோவை, மு. வீ. கள. 22
முழுதும்- ந. அ. 166
"வருநெறி நினைந்து வாரல் என்றலும்
காப்புஇடை யீட்டின் கையறு கிளவியும்
வருக என்றலும் வாரல் என்றலும்
படைத்து மொழிதலும் குடித்திறம் கூறலும்
அரிவையை இன்றுயான் அறிந்தேன் என்றலோடு
உரியன கிளந்த பிறவும் தொகைஇ
வரைவு கடாதல் ஆகும் என்மனார்." த. நெ. வி. 19
"சேடி வினவிய செவிலிக்கு மறைத்தமை
ஆடவற்கு இயம்பலும் அலர்அறி வுறுத்தலும்
நற்றாய் உணர்ந்தமை நட்புற உணர்த்தலும்
வெற்றி வேலவன் வெறிஅச் சுறுத்தலும்
உரைபயில் பிறர்வரைவு உணர்த்தலும் அதன்பின்