பக்கம் எண் :

 அகத்திணையியல்-நூற்பா எண்-153                         499


 

 கூறல் ஈறாகச் சொல்லப்பட்ட பன்னிரண்டு கிளவியும் ஒருவழித்
 தணத்தலின் விரி என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.


  விளக்கம்

  1 தலைவன் தன் ஊருக்குச் செல்லுதலைப் பாங்கிக்குக் கூறுதல்.

  2 பாங்கி தலைவனை ஊருக்குச் செல்லாதவாறு விலக்குதல்.

  3 தலைவன் ?ஊருக்குச் செல்லுதல் வேண்டும்? என்பதனை வேண்டல்.

  4 பாங்கி தலைவனை ஊருக்குச் செல்ல விடுத்தல்.

  5 பாங்கி தலைவிக்குத் தலைவன் தன் ஊருக்குச் சென்றதைத்
    தெரிவித்தல்.தலைவி தன் மனத்தில் வருந்துதல்.

  7 தலைவன் வருதற்குக் காலம் தாமதிக்கவே, காமத்தால் தலைவி
    வருந்துதல்.
  8 பாங்கி தலைவியை ஆற்றுவித்தல்.

  9 தலைவிக்குத் தலைவன் வந்த செய்தியைப் பாங்கி தெரிவித்தல்.

  10 பாங்கி தலைவனிடம் அவனது பிரிவான் ஆகிய வருத்தத்தைத்
    தெரிவித்து மனம் வருந்தி வினவுதல்.

  11 தலைவன் பாங்கியிடம் தன் வருத்தம் கூறி, அவள்
    தலைவியை ஆற்றுவித்துக்கொண்டிருந்த செய்தியை வினாவுதல்.

  12 தலைவியின் துன்பத்தைத் தான் தணித்துக்கொண்டிருந்த
    அருமையைப் பாங்கி தலைவனுக்குக் கூறுதல்.