பக்கம் எண் :

அகத்திணையியல் - நூற்செய்தி 5


  புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும் இரங்கலும் இவற்றின்  
நிமித்தங்களும் முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், என்ற ஐந்திணைகளுக்கும் உரிய பொருளாம் என்பது.  ....21
     
  நிலன் ஒழிந்த முதற்பொருளும் கருப்பொருள்களும்  
உரிப்பொருள்களும் தத்தமக்கு உரிய திணைகளோடு வருதலேயன்றி ஏனைத் திணைகளோடும் மயங்கியும் வரும் என்பது. ....22
     
  கைக்கிளையும் பெருந்திணையும் ஐந்திணைச் செய்யுட்கண்  
மயங்கி வரும் என்பது.  ....23
   
  ஐந்திணைக்கண் களவு கற்பு என ஒழுகலாறு இருவகைப்படும்  
என்பது.  ....24
     
  களவிற்புணர்ச்சியாவது இயற்கைப்புணர்ச்சி முதலாக நான்கு  
வகைப்படும் என்பது.  ....25
     
  இயற்கைப்புணர்ச்சி நிகழும்முன் கைக்கிளை நிகழும்  
என்பது. ....26
     
  கைக்கிளையாவது காமஞ்சான்ற இளையோளைக் கண்டு அவள்  
உள்ளக் குறிப்பை அறியும்வரையில் தலைவன் தன் நெஞ்சோடு கூறிக்கொண்டிருப்பதாம் என்பது. ....27
     
  கைக்கிளை, அந்தணர் முதலிய நான்கு வருணத்தாருக்கும்,  
குறிஞ்சி முதலிய ஐவகை நிலமக்களுள் தலைமக்களுக்கும் உரியது என்பது. ....28
     
  இயற்கைப்புணர்ச்சி தெய்வத்தான் முடிவதும் உண்டு;  
தலைவியான் முடிவதும் உண்டு என்பது. ....29
     
  இயற்கைப்புணர்ச்சி தெய்வத்தான் நிகழும்வழி முயற்சியின்றி  
முடிவதாம் என்பது. ....30