இ-ள் பிரிவு அறிவுறுத்தல் முதலாக வந்துழி மகிழ்ச்சி ஈறாக ஒன்பது
வகையினை உடைத்தாம், வரைவு இடைவைத்துப் பொருள்வயின் பிரிதல்
என்றவாறு. 154
விளக்கம்
இஃது "அருமை செய்து அயர்த்தல்" எனவும்படும். தமர் தேடிய
செல்வம் பெரிதும் உடையன் ஆயினும், தலைவன் தானே தேடிவரும்
பொருள்கொண்டே மணம் செய்து கோடல்வேண்டும் என்ற கருத்தான்,
இப்பிரிவை நாடு இடையிட்டும் காடு இடையிட்டும் மேற்கொள்வான்
என்பது.
1 தலைவன் தன்பிரிவினைத் தோழிக்குத் தெரிவித்தல்.
2 தொடக்கத்தில் அவள் உடன்படாமை.
3 தலைவன் தனது பிரிவின் இன்றியமையாமையைத் தோழி உளம் கொள்ளுமாறு எடுத்துக்கூறுதல்.