பக்கம் எண் :

 அகத்திணையியல்-நூற்பா எண்-155                         515


 

     இது, வரைவு இடைவைத்துப் பொருள்வயின் பிரிதலின் விரி
 இத்துணைத்து என்கின்றது.

     இ-ள்என்பொருட்பிரிவு உணர்த்து ஏந்திழைக்கு என்றல் முதலாகத்
 தலைமகளை  ஆற்றுவித்திருந்த அருமை பாங்கி கூறல் ஈறாகச்
 சொல்லப்பட்ட இருபத்தொன்றும் வரைவு  இடைவைத்துப் பொருள்வயின்
 பிரிவின் விரி என மொழிந்தனர் ஆராய்ந்து அறிந்தோர்  என்றவாறு.

  1 தான் வரைவு இடைவைத்துப் பொருள்வயின் பிரியப் போவதைத்
    தலைவியிடம் கூறுமாறு  தலைவன் தோழியை வேண்டுதல்.

  2 "நின்பொருட் பிரிவை நீயே தலைவிக்கு உரைப்பாயாக" என்று தோழி
    தலைவனிடம்  கூறுதல்.

  3 "யான் பொருள்முற்றியபின் காலம் தாழ்க்கேன்" என்று    தலைவன்
    தோழியிடம் கூறி  நீங்குதல்.

  4 பாங்கி பொருளுக்காகத் தலைவன் பிரிந்த செய்தியைத் தலைவிக்கு
    அறிவித்தல்.

  5 தலைவனது பிரிவினால் தலைவி வருந்துதல்.

  6 பாங்கி வருந்தும் தலைவியை இடித்துரைத்தல்.

  7 தலைவி தன்னை இடித்துரைக்கும் பாங்கியைக் கடிந்து கூறல்.

  8 "விரைவில் தலைவன் மீண்டு வருவான்" என்று தோழி தலைவியிடம்
    வற்புறுத்திககூறுதல்.

  9 மீண்டு வருவதாகத் தலைவன் குறிப்பிட்ட கார்ப்பருவவரவு கண்டு
    தலைவி வருந்துதல்.

  10 தோழி "இதுகாலம் அல்லாக் காலத்து முற்பட்டுப் பெய்யும் மழையே;
     கார்ப் பருவ மழை  அன்று" என்றல்.