வற்புறுத் தல்லொடு வன்புறை அழிதல்
வாய்மை கூறல் மன்னவன் மெய்யுரை
தேறாது புலம்பல் காலம்மறைத்து உரைத்தல்
தூதுவரவு உரைத்தல் தூதுகண்டு அழுங்கல்
மெலிவு கண்டு செவிலி உரைத்தல்
மேவிய செவிலி கட்டுவைப் பித்தல்
கலக்குற்று நிற்றல் கட்டுவித்தி கூறல்
வேலனை அழைத்தல் இன்னல் எய்தல்
விலக்க நினைத்தல் நிலைமை உரைத்தல்
அறத்தொடு நிற்றல் ஐயம் தீர்த்தல்
அவன்வெறி விலக்கல் செவிலிக்குத் தோழி
அறத்தொடு நிற்றல் நற்றாய்க்குச் செவிலி
அறத்தொடு நிற்றல் தேர்வரவு உரைத்தல்
மணமுரசு கேட்டு மயங்கி உரைத்தல்
ஐயுற்றுக் கலங்கல் அவன்நிதி காட்டல்
ஆறைந் துடனே கூறிய மூன்றும்
விரைமலர்க் குழலாய்! வருபொருட் பிரிதல்"
திருக்கோவை. மு. வீ. கள. 23
முழுதும்- ந. அ. 170
"பேதைக்கு என்பொருட் பிரிவுணர்த்து என்றலும்
கோதைக்கு உரைநின் குறிப்புநீ என்றலும்
தாழேன் என்றுஅவன் தணத்தலும் சேடி
ஏழைக்கு அவன்செலவு இனிதின் உணர்த்தலும்
இடுகுஇடை இறைவன் பிரிவுநினைந்து இரங்கலும்
கொடியசொல் பாங்கி கூறலும் தலைமகள்
கொடியசொல் கூறலும் கொற்றவர் மீண்டு
வருவர்என்று இகுளை மதிபெற உணர்த்தலும்
பருவம் கண்டு பைந்தொடி புலம்பலும்
சேடிவம்பு என்றலும் திருநுதல் மறுத்தலும்
வற்புறுத் தலும்வன் பொறைஎதிர் அழிதலும்