விடையிறுத்தல், பாங்கன் முதலில் தலைவன் வேண்டுகோளுக்கு
உடன்படாமை, பின்னர் உடன்படுதல், பாங்கனால் செய்தி அறிந்தபின்
தலைவன் சென்று தலைவியைக் கூடல், அவளை ஆயவெள்ளத்தோடு
கூட்டல் என்பனவாம்.
பாங்கற்கூட்டத்தின் விரிகளாவன - தலைவன் பாங்கனைச் சென்று
அடைதலும், தலைவனுடைய முகவேறுபாட்டினைக் கண்டு பாங்கன் அவனை
நிகழ்ந்தமை வினாதலும், பாங்கனிடம், தலைவன் நிகழ்ந்த நிகழ்ச்சியைக்
கூறலும், பாங்கனிடம், "இதனை நின்காரியமாகக் கருதி முடித்தல் வேண்டும்"
என்று தலைவன் வேண்டுதலும், தலைவன் கருத்திற்கு இசையாத கற்றறி
பாங்கன் அவனை இடித்து உரைத்தலும், தலைவன் அவன் இடித்துக்
கூறியதை மனம் கொள்ளாது அவனிடம் மறுத்துக் கூறலும், பாங்கனைத்
"தலைவி இருக்கும் இடம் செல்லவேண்டும்" என்றலும், பாங்கன்
தலைவனைப் பழித்தலும், தலைவன் தான் தன் விருப்பத்தை அடக்கிக்
கொள்ள இயலாத நிலையினன் ஆதலைப் பாங்கனிடம் கூறலும், பாங்கன்
தன்மனத்தே வருந்துதலும், தலைவனோடு கூட வருந்துதலும், பாங்கன்
தலைவனிடம் தலைவி இருக்கும் இடமும் அவள் வடிவமும் பற்றி
வினவுதலும், தலைவன் அவற்றைக் கூறுதலும், பாங்கன் தலைவனுக்கு
ஆறுதல்மொழி கூறுதலும், பாங்கன் தலைவன் குறித்த இடத்துச் சேறலும்,
அந்நிலையில் தலைவியின் உருவுவெளிப்பாடு கண்டு தலைவன் தனக்குள்
கூறிக்கொள்ளலும், "பாங்கன் தலைவியைத் தான் குறிப்பிட்ட இடத்துக்
காணுங்கொல்லோ" என்று தலைவன் ஐயுற்று வருந்தலும், பாங்கன்
குறியிடத்துத் தலைவியைக் காணுதலும், அவளைத் தலைவன் குறித்த
இடத்தில் எளிதில் காட்டிய தெய்வத்தைப் பாங்கன் வணங்குதலும்,
இத்தகைய வனப்பினளிடம் தன் மனத்தைப் போக்கிய தலைவனை இகழ்ந்து
கூறியதற்குப் பாங்கன் வருந்தலும், இத்தகைய தலைவியைக் கண்டு கூடிப்
பின் பிரிந்து தன் அளவும் வந்து செய்தியைக் கூறும்அளவிற்கு மனத்திட்பம்
கொண்ட