விரும்புதலும், கண்டு "இவ் வேறுபாடு எதனால் ஏற்பட்டது" என்று தன்
உள்ளத்துள்ளே ஐயமுற்று ஆராய்தலும், அவற்றைக் கூர்ந்து நோக்கி
"இவ்வேறுபாடு புணர்ச்சியான் ஆயிற்று" என்று தன் மனத்து ஐயம்
தெளிதலும், தெளிந்த பின்னர்த் தலைவியிடம் மெய்யினானும்
பொய்யினானும் பலவாய் இருவேறு பொருள்பட்ட சொற்களைக் கூறி
ஆராய்தலும், இயற்கைப்புணர்ச்சியின்பின் தன் செயலைத் தொடர்ந்து
முடித்ததற்குத் தோழியே தக்க வாயில் என்று முடிவு செய்த தலைவன்
தோழியை நோக்கிச் செல்லுதலும், அவளிடம் இரந்து குறையுறுதல்
வேண்டும் என்று மனத்து முடிவு செய்தலும், அங்ஙனம் அவன் தோழியை
நோக்கிக் கண்ணியும் தழையும் ஏந்திச் சென்று அவளிடம் இரந்து தன்
காரியத்தை முடித்துச்செல்ல உறுதிசெய்து, ஊரும் பெயரும் கெடுதியும்
பிறவும் வினவியவழி, "இவன்யார்?" எனவும் "இவன் எண்ணம் யாது?"
எனவும் தோழி ஆராய்தலும், ஆராய்ந்து ஓராற்றான் அவன் மனக்
கருத்தைத் தோழி தெளிவாக உணர்தலும், பின் தலைவன், தலைவி தோழி
என்ற இருவரும் சேர்ந்து இருக்கும் நிலையில் அவர்களைக் காண்டற்குச்
சேறலும், அவர்கள் இருக்கும் புனம்கண்டு மகிழ்தலும், புனத்திடைத்
தோழியோடு தலைவியைக் கண்டு தலைவன் மகிழ்தலும், தலைவன்
இருவரையும் கண்டுநின்று முன்புபோலத் தழையும் கண்ணியும் ஏந்திய
வனாய் ஊர் முதலியவற்றை வினவியவிடத்துத் தோழி அவனுக்கு
மறமாற்றம் உரைத்தலும், தோழி தலைவனை எள்ளி நகையாடலும், தோழி
தலைவன் தலைவி என்ற இருவருடைய உள்ளக்கருத்தையும் துணிவாக
உணர்தலுமாம்.
பாங்கியிற்கூட்டம்
பாங்கியால் தலைவியைத் தலைவன் அடைதல் என்பது.
பாங்கியிற் கூட்டத்தின் வகைகளாவன - தலைவன் தோழியை
இரந்துபின்நிற்றலும், தோழி தலைவனை அகற்றி நிறுத்தலும், தலைவன்
மடலே பொருள் எனமுடிவு செய்தலும்,