பக்கம் எண் :

 அகத்திணையியல் - நூற்செய்தி                               57


 

 மடல் ஏறும் எண்ணத்தைத் தலைவன் விடுக்குமாறு தோழி செய்தலும்,
 தலைவன் விருப்பினை நிறைவேற்றத்தோழி உடன்படலும், தலைவன் மடல்
 ஏறும் எண்ணத்தை விடுத்தலும், தோழி தலைவியிடம் தலைவனுடைய
 காரியம்பற்றிக் கூறலும், தலைவி அதற்கு உடன்படுதலும், தோழி
 தலைவியைத் தலைவனிடம் சேர்ப்பித்தலும், தலைவன் தலைவியைக்
 கூடலும், தலைவன் தலைவியை விடுத்தபின் அவளை ஆயத்தாரோடு
 கூட்டலும், தோழி தலைவனிடம் அவன் கடமைஉணர்ச்சி கூறி அதனை
 அவன் நிறைவேற்றுதலை விரும்புதலும் ஆம்.

     பாங்கியிற்கூட்டத்தின் விரிகளாவன - தன் மனத்தில் தலைவிமாட்டு
 உள்ள காதலைத் தலைவன் பாங்கிக்குக் கூறுதலும், தலைவனுடைய குலத்தின்
 மேம்பாட்டையும் தங்கள் குலத்தின் தாழ்வையும் பாங்கி தலைவனுக்குக்
 கூறலும், தலைவன் தலைவியை மேம்படுத்திச் சொல்லுதலும், பாங்கி
 தலைவன் விரும்பிய நங்கை இன்னாள் என்று அறியாதவள் போலத்
 தலைவனை வினவுதலும், தலைவன் தலைவியின் சிறப்பியல்புகளை விளக்கி
 கூறுதலும், தலைவன் குறித்த நங்கை பெறுதற்கு அரியள் என்று பாங்கி
 தலைவனுக்கு இயம்பலும், தலைவி தனக்கு இன்றியமையாதவள் என்று
 தலைவன் சொல்லுதலும், பாங்கி தலைவனிடம் அவன் காரியத்தை அவனே
 சென்று தலைவியிடம் கூறுமாறு குறிப்பிடுதலும், தலைவன் பாங்கி தனக்குப்
 பயன்படுதலுக்கு மறுக்கிறாளே என்ற எண்ணத்தால் அவளைப் பழித்தலும்,
 தலைவியின் அறியாமையைத் தலைவன் மனம் கொள்ளுமாறு பாங்கி
 அவனிடம் கூறலும், தலைவி மூதறிவுடையவள் என்று தலைவன் பாங்கிக்குக்
 கூறலும், தலைவனுக்குமுன்னமே தலைவி பால் அமைந்திருந்த நட்பினைப்
 பாங்கி சுட்டிப் பிறர் உதவியின்றித் தலைவன் தானே நட்புறவு கொள்ளு
 மாறு கூறலும், பாங்கியின் உதவியின்றித் தான் தலைவியோடு தொடர்ந்து

      8