நட்புக்கோடல் இயலாத தன்நிலையைத் தலைவன் கூறலும், ஆடவர்
தாம் விரும்பும் மகளிரை முறைப்படி மணம்செய்து கொண்டு கூடுதலே முறைமை என்று பாங்கி மொழிதலும், தலைவன் அதனை அப்பொழுது செய்தல் இயலாது என்று பாங்கிக்கு மறுமொழி கொடுத்தலும், பாங்கி அவ்விடத்துத் தமர்வருதல் கூடும், வந்தால் தலைவனுக்கு ஏதம் நிகழலாம் என்றுஅஞ்சி அச்சுறுத்தலும், தலைவன் தான் கொண்டுவந்திருந்த கையுறைப் பொருளைப் புகழ்தலும், தோழி அக்கையுறையைத் தாம்பெறுதல் இயலாமையைக் காரணம் காட்டி விளக்கி அதனை மறுத்தலும், பாங்கி கையுறை மறுத்ததனைப் பொறாத நெஞ்சத்தானாகிய தலைவன் வெறுத்துக் கூறலும், பாங்கி தலைவனுக்கு ஏற்ற சமாதானம் கூறி அவனைத் திரும்பிப் போகச்செய்தலும் ஆகிய இருபதும்; தோழியை இரந்தபின்னும் தன்காரியம் நிறைவேறாததால் வருந்திய தலைவன் "இனி மடல் ஏறுதலே தலைவியைப் பெறுதற்கு ஏற்ற உபாயம்" என்று மனங்கொள்ளுதலும், "ஒருவன் பண்டே நட்புற்ற தலைவியைத் தான்பெறாவிடின் மடல்ஏறி அவளைப்பெறுவதே உலக வழக்கம்" என்று தலைவன் பாங்கிக்குக் கூறுதலும், அம்மடலூர்தலையே தான்மேற்கொள்ளப் போவதாகப் பாங்கியிடம் தலைவன் கூறுதலும், "மடலூர்வார் தாம் விரும்பும் மகளிர் படங்களைக் கிழியில் எழுதிக்கைக் கொள்ளுதல் வேண்டும்; அங்ஙனமாகத் தலைவியினுடைய உறுப்புக்கள் ஓவியத்தில் எழுதுதற்கு அரியன, என்று பாங்கி தலைவனுக்குக் கூறுதலும், தலைவன் தன்னுடைய ஓவியக்கலை ஆற்றலைத் தானே புகழ்ந்து தோழியிடம் கூறுதலும், "மடல்மா அமைப்பதற்குப் பனைமடல் வேண்டு மாதலின் அதன்பொருட்டுப் பனைமரத்தை வெட்டினால் அம்மரத்தின்மேல் உள்ள பறவைகள் துன்புறும்; முட்டைகள் உடையும்; ஆதலின் அச்செயல் பேரருளாளருக்கு அடாது" என்று பாங்கி தலைவனிடம் கூறுதலும், இறுதியில் பாங்கி தலைவன் குறையை உட்கொண்டு அவனுக்குத் தான் உதவிசெய்ய உடன்பட்டுநிற்றலைக் கூறுதலும் என்ற
|
|
|
|