பக்கம் எண் :

 அகத்திணையியல் - நூற்செய்தி                               59


 

 ஏழும்; பாங்கி தலைவியினுடைய பேதைப்பருவத்திற்கு ஒத்த இளமைத்
 தன்மையைத் தலைவனிடம் கூறுதலும், தலைவி தன்பார்வை முதலியவற்றால்
 தன்னை வருத்திய மங்கைப் பருவத்தாளாய் இருக்கும் நிலையைத் தலைவன்
 தோழிக்கு உரைத்தலும், தலைவியைப் பார்ப்பதற்குரியகாலம் பெறுதற்கு
 அரியது என்று பாங்கி தலைவற்கு உணர்த்துதலும், தன்பெயரைக் கேட்கும்
 முன்னமேயே தலைவி செவ்வி எளியளாவள் என்று தலைவன் பாங்கிக்கு
 உணர்த்தலும், "தலைவிக்கு மிக இன்றியமையாத என்னை நும்செயல்
 அறியாதவாறு மறைத்த பிறகு தலைவியைப்பெறுதல் உமக்கு எளிது" என்று
 தோழி தலைவனை எள்ளி நகுதலும், அச்சிரிப்பினைக்கண்டு மனம் பொறாது
 தலைவன் வருந்தலும், பாங்கி தலைவனுக்குப் பின் ஆறுதல்மொழி கூறுதலும்,
 அவன்கொணர்ந்தகையுறையை ஏற்றலும், அதனால் தலைவன் தன்துயரைத்
 தணித்துக் கொள்ளுதலும் என்னும் ஒன்பதும்; தலைவனிடம் அவன்
 காரியத்தை முடிப்பதாக ஏற்றுக்கொண்ட பாங்கி தலைவிக்குத் தலைவனுடைய
 காரியத்தைத் தெரிவித்தலும், தலைவி தோழியின் சொற்களைச் செவிக்
 கொள்ளாதவள்போல மேம்போக்காகத் தோன்றக் குறிப்பினால் தன்நிலை
 சாற்றலும், தலைவியின் குறிப்பை உட்கொள்ளாதபாங்கி, தலைவனைத்
 தலைவி முன்பு அறியாதவள்போன்று, தான்விடைவேண்டி வினவியதை
 விடுத்துப் பிறிது ஒருசெய்தியைக் கூறுவதாக உட்கொண்டு தலைமகனைத்
 தான்கண்ட செய்தியைத் தலைவிக்கு வெளிப்படையாகக் கூறுதலும், தலைவி
 நாணத்தால் பாங்கியை மறைத்தலும், பாங்கி உயிரின் சிறந்த என்னை நீ
 மறைப்பது ஏன்?" என்று கூறி அவளைத் தழுவிக்கொள்ளுதலும், பின்
 தலைவன்கொடுத்த கையுறையைப் புகழ்ந்து கூறலும் என்ற ஆறும்; தலைவன்
 தலைவியைப்பெறாது வருந்தும் வருத்தத்தைத் தோழி எடுத்துக் கூறலும்,
 தலைவி தலைவனைக் கூடுதற்கு உடன்படாமல் இருத்தல் இயலாத
 செயலாகும் என்பதை எடுத்து உரைத்தலும், அதற்கு மறுமொழி
 கூறாததலைவியிடம் பாங்கி அவள் உடன்படாளாயின் தலைவன் மடல்