பக்கம் எண் :

 6                             இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 களவுப்புணர்ச்சியில் தலைவன் தலைவியருக்கு உள்ளப் புணர்ச்சியும்
  மெய்யுறு புணர்ச்சியும் உரிய என்பது.


....


31

 மேம்பட்ட தலைவனுக்குப் பெருமையும் உரனும், தலைவிக்கு நாணும்
  மடனும் அச்சமும் நிலைபெற்ற குணங்கள் ஆதலின், முன்னர்
  உள்ளப்புணர்ச்சியே நிகழும் என்பது.



....



32

 காட்சி முதலிய பத்து அவத்தைகளையும் தலைவனும், காட்சி முதலிய
  மூன்றையும் உட்கொண்ட புகுமுகம் புரிதல் முதலிய பன்னிரண்டு
  மெய்ப்பாடுகளையும் தலைவியும் பொருந்தினால், இருவரும் மெய்யுறு
  புணர்ச்சிக்கு உரியவராவர் என்பது.




....




33

 தலைவன் தலைவியர் சந்திக்கும் இடங்கள் பகற்குறி இரவுக்குறி
  என்னும் இரண்டு. அவற்றுள், பகற்குறி வீட்டு எல்லையைக் கடந்தது;
  இரவுக்குறி வீட்டு எல்லையைக் கடவாதது என்பது.



....



34

 களவுக்காலத்துப் பிரிவுகள் ஒருவழித் தணத்தல், வரைவு
  இடைவைத்துப் பொருள்வயின் பிரிதல் என்ற இரண்டும் என்பது.


....


35

 ஒருவழித் தணத்தற்குக் காலவரையறை இன்று என்பது.

....

36

 வரைவு இடைவைத்துப் பொருள்வயின் பிரிதல் இரண்டு திங்களாகிய
  காலவரையறையை உடையது என்பது.



....



37

 களவு வெளிப்படா முன்னும் களவு வெளிப்பட்ட பின்னும் திருமணம்
  நிகழும் என்பது.


....


38

 தலைவன் இயற்கைப்புணர்ச்சி நான்கன்கண்ணும் தெளிவுபெற்றும்,
  பாங்கனாலாவது பாங்கியாலாவது தெளிவுபடுத்தப்பட்டும் களவு
  வெளிப்படும் முன் வரைவான் என்பது.



....



39