பக்கம் எண் :

 அகத்திணையியல் - நூற்செய்தி                               61


 

     பகற்குறியின் வகைகளாவன - தோழி தலைவியைத் தலைவனிடம்
 குறிக்கண் கூட்டலும், தலைவியைத் தலைவன் குறிக்கண்கூடுதலும், தோழி
 தலைவியை ஆயத்திடம் அழைத்துச்சேறலும், தலைவனிடம் தலைவியை
 ஓம்படைசாற்றலும் ஆகிய நான்குமாம்.

     பகற்குறியின் விரிகளாவன - தோழி தலைவனிடம் குறியிடம் கூறலும்,
 தலைவியைக் குறியிடத்துக்கொண்டு சேர்தலும், தலைவியை விடுத்துத்
 தோழி நீங்கலும், தலைவன் தலைவியைக்காண்டலும், கூடுதலும், புகழ்தலும்,
 தலைவியை விடுத்தலும், பாங்கி தலைவியை எய்திக் கையுறை காட்டலும்,
 பாங்கி தலைவியை ஆயத்திடைக் கூட்டலும், தலைவியை விடுத்துத்
 தலைவனுக்கு ஓம்படைசாற்றலும், விருந்தினனாமாறு கூறித்தலைவன்
 செலவினை விலக்குதலும், தலைவன் விருந்தினனாய் இருத்தலை
 விரும்புதலும் என்று பாங்கியிற் கூட்டத்துக் கூறப்பட்ட பன்னிரண்டுமாம்.

ஒருசார்பகற்குறி

     பகற்குறியிடத்து ஒருவரைஒருவர் எய்தாமல் தலைவனும் தலைவியும்
 வருந்துதல் என்பது.

     ஒருசார் பகற்குறி வகைகளாவன - ஒருவரை ஒருவர் எய்தாமையால்
 தலைவனும் தலைவியும் தனித்தனியே வருந்துதலும், வருந்தும் தலைவியைத்
 தோழி வற்புறுத்துதலும், வருந்தும் தலைவனுக்குத் தோழி தலைவியை
 இற்செறித்த செய்தியை உணர்த்தலுமாம்.

     ஒருசார் பகற்குறி விரிகளாவன - தலைவன் பிரிந்தவிடத்துத் தலைவி
 அந்திப்பொழுதுகண்டு ஆற்றாது வருந்துதலும், தலைவி நிலைகண்டு பாங்கி
 வருந்துதலும், தலைவன் வருதற்குக் காலம் தாழ்த்ததனால் தலைவி
 வருந்துதலும், அங்ஙனம் வருந்துதலால் களவுவெளிப்பட்டு ஏதம் நிகழும்
 எனப்பாங்கி தலைவியை இடித்து உரைத்தலும், பாங்கியிடம் தனக்கு ஏற்