பக்கம் எண் :

 62                            இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 பட்ட வெறுப்பால் அவள் தன்முன்னே நிற்கவும் அவளை நேராக நோக்கிக்
 கூறாது புறமாக மொழிந்து தலைவி தன் மனநிலையை அவளுக்கு
 அறிவுறுத்தலும், பின்நட்பின் காழ்ப்பால் நேரிடையாகப் பாங்கியொடு
 பேசுதலும், பாங்கி அஞ்சித் தலைவியை அச்சமுறச்செய்தலும், தலைவனைப்
 பிரிதற்கு இயலாமை குறித்துத் தலைவி இரங்கி உரைத்தலும், தலைவன்
 வந்துவிட்ட செய்தியைத் தோழி தலைவிக்கு அறிவித்தலும், தலைவன்
 வேலிப்புறத்தே நிற்பத் தலைவியை இற்செறித்தலைக் கிளி முதலியவற்றிற்குக்
 கூறுவாள் போன்று தோழி அவனுக்கு அறிவித்தலும், தோழி தலைவன் தன்
 முன்னே நிற்ப அவனை நோக்கிக் கூறாமல் வண்டு முதலியவற்றை நோக்கிக்
 கூறுவாள்போல அவனுக்கு அறிவித்தலும், தலைவியைச் செவிலி இற்செறித்த
 நிலையைப் பாங்கி தலைவனுக்கு நேரிடையாகக் கூறலும், இற்செறிப்பு
 உணர்த்தியபின் தலைவியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புப்பற்றித்
 தலைவனிடம் கூறலும், தலைவியைப் பகற்குறிக்கண் காண்டல் இயலாமை
 குறித்துத் தலைவன் பற்றுக்கோடு ஏதுவும் இன்றித் தன்நெஞ்சோடு வருந்திக்
 கூறலும் என்ற பதினான்குமாம்.

பகற்குறிஇடையீடு

     பகற்குறிக்கு இடையில் சில தடைகள் நிகழ்தல் என்பது.

     பகற்குறி இடையீட்டின் வகைகளாவன - பாங்கி முறையே
 தலைவனையும் தலைவியையும் பகற்குறிக்கு வாராது விலக்கலும், தலைவன்
 வாராத நேரத்துத் தலைவியும், தலைவி இல்லாத நேரத்துத் தலைவனும்
 பகற்குறிக்கண் சேறலும், அதனால் இருவரும் மனம் கலங்குதலும் என்ற
 மூன்றாம்.

     பகற்குறி இடையீட்டின் விரிகளாவன-தலைவன் குறியிடத்து வருதலைத்
 தோழி விலக்குதலும், தலைவி பகற்குறியிடத்து வாராதவாறு தோழி
 விலக்குதலும், தலைவி தான் விளையாடிய இடங்களை நோக்கி இனி
 அப்பக்கல் வருதற்கு