வாய்ப்பு இன்மை கருதி வருந்துதலும், தோழி தலைவியை
அவ்விடத்தினின்றும் தம் இல்லத்துக்கு அழைத்துச் சேறலும், இடையே
தலைவி தலைவனுடைய உருவு வெளிப்பாடுகண்டு வருந்துதலும், மறுநாள்
தலைவன் பகற்குறிக்கண் வந்து நெடுநேரம் இருந்து வருந்துதலும்,
தலைவியில்லாத அவ்வெற்றிடம் முழுதும் அவளைத் தேடித் தலைவன்
மனம் உளைதலும், தலைவி வாழும் ஊரை நோக்கி ஆண்டுச் சேறற்கு
அருமையின் தலைவன் மனம் சுழலுதலும் ஆம்.
இரவுக்குறி
இரவில் தலைவன் தலைவியை எதிர்ப்படற்கு உரிய தனி இடம்
என்பது.
இரவுக்குறியின் வகைகளாவன - தலைவன் தோழியை இரவுக்குறி
வேண்டுதலும், தோழி முதற்கண் வழி முதலியவற்றது ஏதம்கூறி மறுத்தலும்,
பின் அவன் ஆற்றாமை கண்டு உடன்படுதலும், தலைவியை இரவுக்குறிக்கு
அழைத்துச் சேறலும், தலைவன் தலைவியைக் கூடலும், அவள் நலத்தைப்
பாராட்டலும், தோழியோடு கூட்டுதலும், பாங்கி "இரவுக்குறி வேண்டா"
என்று கூறத் தலைவன் வாடுதலும் பின் தன்னூர் அடைதலும் ஆகிய
ஒன்பதுமாம்.
இரவுக்குறியின் விரிகளாவன - தலைவன் தோழியிடம் இரவுக்குறியில்
தலைவியைக் கூடுதற்கு வாய்ப்புச்செய்துதருமாறு வேண்டுதலும், பாங்கி
தலைவன் வரவேண்டிய வழியினது துன்பங்கள்பற்றிப் பேசுதலும், தலைவன்
அவ்வழிக்கண் வருதல் தனக்கு மிகஎளிய செயலே என்று விளக்கிக்
கூறுதலும், அதுகேட்டுத் தோழி இரவுக்குறிக்கு உடன்படுதலும், தோழி
தலைவனிடம் அவன் நாட்டு அணியியல்பற்றிவினாதலும், அங்ஙனம்
வினவியதோழி "யாது காரணம்பற்றி என்னை என்நாட்டு அணியியல்
வினவினாள்?" என்பதனை உட்கொண்டதலைவன், அவளிடம் அவள்நாட்டு
அணியியல்பற்றி வினவுதலும், பாங்கி தன் நாட்டு அணியியலைத்
தலைவனுக்கு