பக்கம் எண் :

 64                            இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 அறிவித்தலும், தலைவிக்குத் தலைவன் இரவுக்குறி வேண்டிநிற்கும்
 செய்தியைத் தோழி அறிவித்தலும், இரவுக்குறியின் ஏதம் அஞ்சித் தலைவி
 அதனுக்கு உடன்படாது தன் நெஞ்சோடு உசாவுதலும், பாங்கி தலைவனுடைய
 ஆற்றாமை முதலியன கூறி இரவுக்குறிக்குத் தலைவியை இசையச் செய்தலும்,
 தலைவி தோழியிடம் இரவுக்குறிக்குத் தன் இசைவினைத் தெரிவித்தலும்,
 தலைவி இரவுக்குறிக்கு உடன்பட்ட செய்தியைத் தோழி தலைவனுக்குத்
 தெரிவித்தலும், தலைவனைக் குறியிடத்து நிறுத்தி வந்து தோழி செவிலித்
 தாயின் உறக்கத்தினைச் சோதித்து அறிதலும், தலைவியிடம் தலைவன்
 இரவுக்குறிக்கண் வந்துள்ள செய்தியைத் தெரிவித்தலும், தலைவியைத் தோழி
 இரவுக்குறி இடத்துக்கு அழைத்துக் கொண்டு சேறலும், தலைவியைக்
 குறியிடத்து விடுத்துத் தோழி கையுறை அமைத்துக் கொணர்வதாகக் கூறி
 நீங்கலும், தலைவன் தலைவியைக் குறியிடத்துக் காண்டலும், அவள் நலன்
 புகழ்தலும், தலைவி, தலைவன் வரும் வழியின் ஏதங்களை நினைத்து மனம்
 மறுகுதலும், தலைவன் தான் ஏதமின்றி எளிதின் வரும் செய்தியைத் தலைவி
 மனம் கொளக்கூறி அவளைத் தெளிவித்தலும், தலைவியைக் கூடுதலும்,
 அவள் நலத்தைப் புனைந்து உரைத்தலும், தலைவி தலைவனை
 இரவுக்குறியின் ஏதம் அஞ்சி "இரவுக்குறி வேண்டா" என்று விலக்குதலும்,
 தலைவன் தலைவியை வீட்டு எல்லைக்குக் கொண்டு விடுத்தலும், தோழி
 தலைவியை அணுகி அவளுக்குத் தான் அமைத்துக்கொண்டு வந்த
 கையுறையைக் காட்டலும், பின் தலைவியை வீட்டிற்குள் உய்த்தலும், பின்
 தலைவனிடத்துச் சென்று இரவுக்குறிக்கண் வருதலைத் தோழி விலக்கலும்,
 புணர்ச்சி இடையீடு கருதித் தலைவன் மனம் மயங்குதலும், தோழி
 இரவுக்குறியில் தலைமகனைத் தலைப்படுதற்கண் தலைவி உறும் துயரை
 விளக்கிக் கூறித் தலைமகனை இரவுக்குறியை விடுக்குமாறு வேண்டலும்,
 தலைவியை இரவுக்குறிக்கண் துய்த்த தலைவன் இரவே தன் ஊரை நோக்கி
 மீண்டு போதலும் ஆம்.