பக்கம் எண் :

 அகத்திணையியல் - நூற்செய்தி                               65


 

இரவுக்குறி இடையீடு     

     இரவுக்குறிக்கண் தடைகள் நிகழ்தல் என்பது.

     இரவுக்குறி இடையீட்டு வகைகளாவன - குறி அல்லாததனைக்
 குறியாகக் கொண்டு மருளுதலும், இரவுக்குறியில் தலைமகளை
 எதிர்ப்படுதற்கு இடையே ஊறுகள் பல உளவாதலும் என்ற இரண்டாம்.

     இரவுக்குறி இடையீட்டு விரிகளாவன - தலைவிக்குத் தோழி தலைவன்
 இரவுக்குறிக்கண் வந்துள்ள செய்கையை உணர்த்தியவழித் தலைவி தான்
 முன்பே மற்றொன்றைத் தலைவன் செய்த குறியாகக் கருதிச் சென்று வறிதே
 மீண்ட செய்தியைக் கூறுதலும், தோழி தலைவி தெளிவாக அறிந்து
 கொள்ளாதபடி அவன் குறப்புச் செய்த குறைபாட்டை எடுத்துக் கூறலும்,
 தலைவியைக் காணாமையால் இரவுக்குறிக்கண் வந்த தலைவன் மனம்வாடி
 மீண்டுசேறலும், பொழுது விடிந்தபின், தலைவன் இல்லாத அவ்விரவுக்
 குறியிடத்து அவன் வைத்துச்சென்ற அடையாளம்கண்டு தலைவி
 இரங்குதலும், தலைவி அச்செய்தியைத் தோழிக்குக் கூறலும் தோழி
 தம்பிழைப்பு அன்று என்று அமைதிகூறித் தலைவியின் வருத்தத்தைத்
 தணித்தலும், பின்வந்த தலைவனிடம் குறிப்புத் தவறியதை  அவன்மேற்
 ஏற்றித் தோழி கூறுதலும், தலைவன் குறிப்புத்தவறிய செயலைத் தலைவி
 மேல் ஏற்றிக்கூறுதலும், தலைவி தலைவன் செய்தகுறிப்பாக வேறொன்றை
 நினைத்துக்குறிக்கண்சென்று மீண்டசெய்தியைத் தோழிகூறலும், தான் செய்த
 குறிப்பை அறிந்தும் தலைவி இரவுக்குறியிடத்து வரவில்லை என்று தலைவன
 கூறியசொற்களைத் தோழி தலைவியிடம் இயம்பலும், தன்மேல்
 உண்மையாகக் குறை எதுவும் இல்லையே என்று தலைவி வருந்துதலும்,
 இரவில் தாய்தூங்காமல் விழித்திருத்தலும், நாய் உறங்காமல் குரைப்பதற்கு

     9