ஏற்றதாய் இருத்தலும், ஊர்மக்கள் உறங்காமல் பேசிக்கொண்டிருத்தலும்,
ஊர்க்காவலர் ஊரைச்சுற்றிக்கொண்டு வருதலும், நிலவு பகல்போலக் காய்ந்து
வெளிப்படுதலும், கோட்டான் ஒலித்தலும், கோழி கூவுதலும் ஆகிய இரவுக்
குறியிடையீடுகளைக் கூறுதலும் ஆகிய பதினெட்டும்ஆம்.
வரைதல் வேட்கை
தலைவன் தன்னை விரைவில்மணந்துகோடல் வேண்டும் என்று தலைவி
விரும்புதல் என்பது.
வரைதல் வேட்கையின் வகைகளாவன - "களவு வெளிப்பட்டு விடுமோ"
என்ற அச்சமும், பலவகை ஏதங்களும் தரும் களவிடத்து ஏற்பட்டவெறுப்பும்,
தலைவனைத்தலைவி பிரிந்திருக்க ஆற்றாமையும் ஆகிய மூன்றுமாம்.
வரைதல் வேட்கையின் விரிகளாவன-தோழி தலைவியின் துயரம்பற்றி
வினவுதலும், பிறரால் அறிதற்கு அரிய இரகசியமாகிய தன்
களவொழுக்கத்தைச் செவிலி அறிந்துவிட்டாள் என்ற செய்தியைத்
தலைவி தோழிக்குக் கூறுதலும், தலைவி தன்னைக்காண்பதற்குத் தலைவன்
வருவது அரிதாய் இருக்குமாற்றைத் தோழிக்குக் கூறுதலும், தலைவன்பிரிவு
தாங்கவொண்ணாததாய் இருத்தலின் ஆற்றாமை மிகுதியால் தலைவி
தலைவன்ஊருக்கே செல்வதற்கு மனம் துணிதலும், அப்போது, தலைவியைத்
துன்புறுத்தியதால் தலைவனைத் தோழி பழித்துக் கூறுதலும், தலைவனைத்
தோழி பழிப்பதனைப் பொறாத தலைவி "அவன் நற்குண முடையவனே"
என்று எடுத்துச் சொல்லுதலும், தலைவனைக் கனவிடைக் கண்டதால்
அக்கனவு தன்னை நனவில் நலிகின்ற தன்மையைத் தலைவி தோழியிடம்
கூறலும், தன்இயற்கை அழகு தேய்ந்து குறைகின்றவாற்றைத் தலைவி
தோழியிடம் கூறலும், தோழியிடம் தன்துயர்பற்றித் தலைவனுக்கு எடுத்துக்
கூறவேண்டும் என்று தலைவி விரும்பிக்கூறலும், "உன்மன