பக்கம் எண் :

 அகத்திணையியல் - நூற்செய்தி                               67


 

 நிலையை நீயே தலைவனிடம் கூறுக" என்று தோழி தலைவியிடம்
 கூறலும், ஊரில்பலரும் கூறும்பழிமொழியை அறிந்து தான்கொண்டுள்ள
 அச்சத்தைத் தலைவி தோழியிடம் கூறுதலும், தலைவன் வரும்வழியின்
 அருமையை அறிந்து தலைவி தான்கொண்டுள்ள அச்சத்தைத் தோழியிடம்
 கூறலும், காமம் மிகுகையினாலே தலைவனிடம் தனக்கு ஏற்பட்ட மிக்க
 நினைவால் ஏற்பட்ட சொற்களைத் தலைவி கூறுதலும், தலைவி தன்னுள்ளே
 செயல்அற்று இருக்கும் செய்தியைக்கூறலும், கொடியவழிகளைக் கடந்து
 தலைவன் தன்னைக் காணவாராத வண்ணம் அவனை விலக்கும்படித்
 தோழியைத் தலைவி வேண்டலும், குறியிடத்து வாராதபடி தலைவனை
 விலக்கும்படி தலைவி தோழியை வேண்டலும், இல்லத்தில் வெறியாடுதல்
 நிகழாதபடி தடுக்குமாறு தலைவி தோழியை வேண்டலும், தன்னை மணம்
 செய்தற்பொருட்டுத் தமர்பால்வரும் பிறரை உண்மைகூறி விலக்கும்படி
 தலைவி தோழியிடம் கூறலும், தலைமகனது வரைவை ஏற்றுக்கொள்ளும்படி
 குரவருக்குத் தெரிவிக்குமாறு தலைவி தோழியிடம் கூறலும் ஆகிய
 பதினெட்டுமாம்.

வரைவுகடாதல்

     தலைவியை மணம்செய்துகொள்ளும்படி தலைவனைத் தோழி
 வற்புறுத்துதல் என்பது.

     வரைவுகடாதலின் வகைகளாவன - பொய்யாகக் கூறுதலும், தலைவன்
 களவுக்கூட்டத்தை மறுத்தலும், தலைவனை இடித்துக்கூறலும், உண்மை
 நிலையைக் கூறலும் என்ற நான்குமாம்.

     வரைவுகடாதலின் விரிகளாவன - தலைவியது வேறுபாட்டிற்குக் காரணம்
 என்ன என்றுகேட்ட செவிலித்தாய்க்குத் தான் வேறுகாரணம் காட்டிக்
 கூறியதைத் தலைவிக்குத் தோழி கூறுதலும், பலரும் கூறும் பழிமொழியைத்
 தலைவனுக்குத் தோழி தெரிவித்தலும், களவொழுக்கத்தைத் தாய்