அறிந்தாள் என்பதைத் தலைவனுக்குத் தோழி அறிவுறுத்தலும்,
தலைவியின் இல்லத்தில் வெறியாட்டு நிகழ்த்தப்போவதைத் தோழி தலைவனுக்குக் கூறி அவனை அச்சுறுத்தலும், "தலைவியை அயலார் மணம் செய்துகொள்ள முயல்கின்றார்கள்" என்பதைத் தோழி தலைவனுக்குக் கூறுதலும், தலைவன் தமர் மணம்பேசுதற்கு வரின் தலைவி தமர் ஏற்றுக் கொள்வார் என்று தலைவனுக்கு உரைத்தலும், "மணம் செய்துகொள்ளுதற்கு உரியகாலம் இஃது" என்பதைத் தோழி தலைவனுக்கு உரைத்தலும், தலைமகளுடைய மூதறிவைத் தோழி தலைவனுக்கு அறிவித்தலும், குறியிடங்களைத் தோழி மாற்றி அமைத்தலும், பகலில் வருகின்ற தலைவனை இரவில் வருமாறு கூறுதலும், இரவில் வரும் தலைவனைப் பகலில் வருமாறு கூறுதலும், பகலினும் இரவினும், பலகாலும் வருமாறு தோழி தலைவனிடம் கூறுதலும், பகற்காலத்தும் இரவுக்காலத்தும் இவ்விடத்தின்நின்றும் நீங்கு வாயாக என்று தோழி தலைவனிடம் கூறுதலும், தலைவன் அங்ஙனம் வரையாது வந்து ஒழுகுவது அவனுடைய நாடு ஊர் குலம் என்பனவற்றின் பெருமைக்குத் தகாது என்று தோழி தலைவனுக்குக் கூறுதலும், தலைவன் வரும் வழியின் துன்பத்தை நினைத்துத் தலைவி அஞ்சுதலைத் தோழி தலைவனுக்குக் கூறுதலும், தலைவியின் பொறுக்கமுடியாத தன்மையைத் தலைவனுக்குத் தோழி மிகக்கூறுதலும் தலைவன் குறிக்கண்வரும் வழியில் காவல்மிகுதியும் உண்டு என்பதைத் தோழி தலைவனுக்கு உணர்த்துதலும், கனவில் தலைவனைக்கண்டு பின் நனவில் காணாமையால் தலைவி மிகவும் வருந்தும் தன்மையைத் தோழி தலைவனுக்கு உணர்த்துதலும், தலைவியின் இயற்கை அழகு நாள்தோறும் குறைந்து வருதலைத் தோழி தலைவற்கு உணர்த்துதலும் ஆகிய இருபதும்ஆம்.
|
|
|
|