தாய் அடக்கி வைத்தமையைத் தலைவி தோழிக்குக் கூறுதலும் மிக்க
இருளில் தலைவனைச் செவிலி கண்ட செய்தியைத் தலைவிக்குத் தோழி
கூறுதலும் என்ற ஏழும், தலைவியின் வேறுபாட்டிற்கு உரிய காரணத்தைச்
செவிலி தோழியிடம் வினவுதலும், தோழி வெறியாட்டினை விலக்குவித்தலும்,
வெறிவிலக்கியவழிச் செவிலி தோழியை வினவுதலும், தலைவி பூத்தரு
புணர்ச்சி-புனல்தரு புணர்ச்சி-களிறுதருபுணர்ச்சி என்ற இவற்றால்
தலைவனைச் சந்தித்த செய்தியைத் தோழி அறத்தொடு நிற்றலும்,
தலைவியின் வேற்றுமை கண்டு தாய் வினவியவழிச் செவிலி முன்னிலை
மொழியான் செய்தியை விளக்குதலும் ஆகியனவாம்.
களவு வெளிப்படை
களவொழுக்கம் வெளிப்படுதல் என்பது.
உடன்போக்கு, தலைவி தலைவனுடன் ஊரைவிட்டுச் சென்றதைப்
பலரும் அறிதலாகிய கற்பொடு புணர்ந்த கவ்வை, மீட்சி என்று களவு
வெளிப்படை மூன்று கிளவித்தொகைகளை உடையது.
உடன்போக்கு
தமரைப்பிரிந்து தலைவி தலைவனுடன் செல்லுதல் உடன் போக்காம்.
தோழி தலைவனிடம் உடன்போக்கை வற்புறுத்திக் கூறுதல்,
தொடக்கத்தில், தலைவன் உடன்போக்கிற்கு உடன்படாதிருத்தல், தோழி
உடன்போக்கிற்குத் தலைவனை உடன்படச்செய்தல், தலைவன்
உடன்
போக்கிற்கு உடன்படுதல், தோழி தலைவனையும் தலைவியையும் உடன்
போக்கல், புணர்ந்துடன்போகிய அவ்விருவரையும் கண்டோர் விலக்குதல்,
தலைவன் தலைவியைப் புகழ்தல், தலைவியைத்தேற்றல்
என்ற எட்டும்
உடன்போக்கின் வகைகளாம்.
10