பக்கம் எண் :

 74                            இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     உடன்போக்கின் விரிகளாவன -

     "எமர் இவளை நீ வரைதற்கு உடன்படார்; ஆதலால் இவளை
 உடன்கொண்டு செல்க" என்று தோழி தலைவனுக்கு அறிவித்தலும்,
 தலைவியின் மென்மைத்தன்மை கூறி அவளை உடன்கொண்டு செல்லுதலைத்
 தலைவன் மறுத்துக்கூறலும், அங்ஙனம் போதற்குத் தோழி தலைவனை
 உடன்படச்செய்தலும், தலைமகனும் உடன்போக்குக்கு உடன்படுதலும், தோழி
 தலைவிக்கு உடன்போக்கினை அறிவித்தலும், அங்ஙனம் உடன்சென்றால்
 தன்நாணம் அழிந்துவிடுதல் குறித்துத் தலைவி வருந்துதலும், "நாணினும்
 கற்பே சிறந்தது" என்று தோழி தலைவிக்குக் கூறுதலும், தலைவனுடன்
 செல்வதற்குத் தலைவி உடன்பட்டு எழுதலும், சுரத்தின் இயல்பைத் தோழி
 உரைத்தவிடத்துத் தான் அதற்கு அஞ்சாமல் சுரம் செல்லத்
 துணிந்திருத்தலை அவளுக்குத் தலைவி கூறுதலும், அதனைத் தோழி
 தலைவற்குக் கூறுதலும், தலைவனிடம் தலைவியைத் தோழி அடைக்கலமாகக்
 கொடுத்தலும், தோழி நடுயாமத்தில் தலைவியைத் தலைவனுடன் விடுத்தலும்,
 தலைவன் தலைவியைப் பாலைநிலத்தில் மெல்லக் கொண்டுசெல்லுதலும்,
 தலைவி நடந்து வந்ததால் அடைந்த களைப்பை அறிந்து தலைவன் அவளை
 இடைப்பட்டதொரு பொழிலில் இளைப்பாறச் செய்தலும், ஆண்டிருந்த
 மலர்களைப் பறித்துத் தலைவிக்குச் சூட்டி அவள் இயற்கை யழகோடு கூடிய
 செயற்கையழகைக்கண்டு தலைவன் மகிழ்ந்து உரைத்தலும், சுரத்திடை
 அவ்விருவரையும் கண்டோர் "இவர் தேவரோ? மானிடரோ?" என்று
 ஐயுறுதலும், அவர்களைக்கண்டு மகிழ்தலும், அச்சுரத்திடை அவர்கள்
 நடந்துவந்ததற்கு இரங்கலும், "பொழுது போயிற்றாதலின் இனிப் போதற்கு
 இவ்வழி உரியதுஅன்று" என்று கண்டோர்கூறி அவ்விருவரையும் மீண்டும்
 நடக்காதவாறு தடுத்தலும், தங்கள் ஊர் அருகில் உள்ள செய்தியை
 அவ்விருவருக்கும் எடுத்துக் கூறலும், தலைவன் தாம்செல்ல வேண்டிய ஊர்
 அணிமையிலேயேஉள்ள செய்தியைத் தலைவிக்குக் கூறலும், தலைவிக்குத்
 தலைவன் தன்நகரைச் சிறிது