தொலைவிலேயே சுட்டிக்காட்டலும், தலைவன் தன்பதியை அடைந்த
செயலைத் தலைவிக்கு உணர்த்துதலும், அவளோடு தன்மனையைச்
சார்தலும் ஆம்.
கற்பொடு புணர்ந்தகவ்வை.
தலைவி தலைவனுடன் சென்றதைப் பலரும் அறிதலாம்.
கற்பொடுபுணர்ந்த கவ்வையின் வகைகளாவன-செவிலி புலம்புதலும்,
நற்றாய் புலம்புதலும், நற்றாய் மயங்கி உரைத்தலும், கண்டோர் வருந்தி
உரைத்தலும், செவிலி தேடிச்செல்லுதலும், என்ற ஐந்தாம்.
கற்பொடு புணர்ந்த கவ்வையின் விரிகளாவன-மேம்பட்ட என்மகள்
எங்கே போயினாள்? என்று செவிலி தோழியை வினாவுதலும், தமர்
மணத்திற்கு உடன் படாமையால் தலைவி தன்விருப்பின்படி தலைவனுடன்
உடன் போயின செய்தியைத் தோழி செவிலிக்கு உணர்த்தலும், செவிலி
தன்னைத் தேற்றுவோரை நோக்கி வருந்திக் கூறுதலும், தலைவனுடன் தான்
போதலைத் தலைவி குறிப்பாக உணர்த்தியும் தான் அறிந்துகொள்ள
முடியாமையைச் செவிலி தன் அறியாமை காரணமாக நொந்து உரைத்தலும்,
தலைவியை விரைவில் மீண்டுவரச்செய்யவேண்டும் என்று செவிலி முருகக்
கடவுளை வாழ்த்துதலும், தன்கற்பின்மிகுதி தோன்றத் தலைவி தலைவனுடன்
போயினசெய்தியைச் செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்றலும், தலைவியின்
பிரிவினால் நற்றாய் தன்மனத்துள்ளே வருந்துதலும், நற்றாய் தோழியோடு
கூறி வருந்துதலும், தோழியின் வருத்தம் கண்டு நற்றாய் புலம்புதலும், நற்றாய்
பாங்கிமார்களோடு வருந்திக் கூறலும், அயலாரோடு வருந்திக் கூறலும்,
தலைவி வளர்த்து விடுத்துச்சென்ற கிளியோடு வருந்திக் கூறலும், தலைவி
பழகும் இடங்களை எல்லாம் கண்டு வருந்திக் கூறலும், தன்மகள் மீண்டு
வரும்படி காக்கை கரைவதாயின் அதற்குச் சிறந்த உணவு வழங்குவதாகக்
கூறி நற்றாய் காக்கையைக் கொண்டு சகுனம் பார்த்தலும், தலைவன்
தலைவியிடம் மிக்க