விட்ட செய்தியை நற்றாய்க்குக் கூறுதலும், தலைவியை
அழைத்துச் சென்று
வேற்றூரில் மணந்துகொண்ட தலைவன் தலைவியிடம் அவள் விரும்பியவாறு
தம்ஊருக்குத் திரும்புதற்கு ஒருப்படலும், தலைவன் தம்மூர் அணிமையில்
வந்துவிட்டது என்று மீண்டுவருகாலைத் தலைவியிடம் கூறுதலும், தலைவி
தாம் மீண்டுவரும் செய்தியைத் தமக்கு முன்னமேயே ஊர் நோக்கிச் சென்று
கொண்டிருந்தவர் வாயிலாகத் தன்தோழியருக்குச்
சொல்லி அனுப்புதலும்,
அவர்கள் தோழிமார்களுக்குத் தலைவி மீண்டுவரும் செய்தியைத்
தெரிவித்தலும், தோழிமார்கள் அம்மகிழ்ச்சிச்செய்தியை நற்றாய்க்கு
அறிவித்தலும், நற்றாய் "என்மகளை முதற்கண் என்மனைக்கு அழைத்து
வருவானா? அல்லது அவன் தாய்மனைக்கு அழைத்துச்
செல்வானா? என்று
வேலனிடம் வினவுதலும் என்பனவாம்.
தலைவன் தலைவியை அழைத்து உடன்போக்குச்சென்று ஆண்டு
அவளை மணந்து மீடற்கும், அவளை வரையாது அழைத்துவந்து
தன்மனையிலோ அவள் மனையிலோ மணந்துகொள்வதற்கும் தலைவன்
தம்மூர் சார்ந்தமை சாற்றல்-தலைவி முன்செல்வோரிடம் தன்வரவு
பாங்கியருக்கு உணர்வித்தல்-அவர் பாங்கியருக்கு - உணர்த்தல்-பாங்கியர்
நற்றாய்க்கு உணர்த்தல்-நற்றாய் கேட்டு அவன் உளம் கொள வேலனை
வினாவுதல்-என்ற துறைகள் உரியன.
தலைவன் இல்லத்தில் வரைதல்-வினாவுதலும் விடை இறுத்தலும் மனம்
பொருந்துதலும் என்ற மூவகைத்து.
தலைவன் இல்லத்தில் வரைதலின் விரிகளாவன-நற்றாய் தன்மகளுக்குத்
தன்மனையில் திருமணம் செய்விக்கும் விருப்பத்துடன் அதுபற்றிச்
செவிலியை வினவுதலும், செவிலிக்குத் தோழி திருமணம் முன்னமேயே
நடந்துவிட்ட செய்தியைக் கூறுதலும், அதனைச் செவிலி நற்றாய்க்குத்
தெரிவித்தலும், தலைவன் தலைவி என்ற இருவரும் உடன் போய் மீண்டு
வந்தபின் தான் வேற்றூரில் தலைவியை மணம் செய்துகொண்ட