செய்தியைத் தோழிவாயிலாகத் தலைமகள் தலைமகன் தமருக்கு
அறிவித்தலை விரும்புதலும், தோழி அச்செய்தியை முன்னமேயே தமருக்கு
அறிவித்துவிட்ட செய்தியைக் கூறலும் என்பனவாம்.
தலைமகன் தலைவியைப் புணர்ந்து உடன்போய்த் தன் மனையகத்து
ஊரில்வரைந்து மீடற்கும், செவிலிக்கு இகுளை வரைந்தமை உணர்த்தல்
-வரைந்தமை செவிலி நற்றாய்க்கு உணர்த்தல்-தலைவன் பாங்கிவாயிலா
கத்தான் மணன் அயர்ந்ததைத் தலைவி தமர்க்கு அறிவிக்க விரும்புதல்
-தோழி அதனைத் தான் முன்னமேயே அறிவித்துவிட்ட செய்தியைக் கூறல்
என்ற துறைகள் உரியனவாம்.
ஒருவகையான் மீண்டுவரைதலும் உண்டு. அஃதாவது தலைவி
தலைவனொடு உடன்போக்கு நிகழ்த்தியவழித் தலைவி தமர் பின்தொடர்வார்
என்று விரைந்து உடன்போகிப்பின் மீண்டுவந்து வரைதலாகும். அதற்கும்
தலைவன் தம்ஊர் சார்ந்தமை உணர்த்தல் முதலாகத் தான் அதுமுன்னே
சாற்றியதனைத் தோழி உணர்த்தல் ஈறாகக் கூறப்பட்டன யாவும் துறைகளாம்.
உடன்போக்கு இடையீடு
தலைவனும் தலைவியும் உடன்போக்கு நிகழ்த்திய இடத்து இடையே
தடை நிகழ்தல் என்பது.
உடன்போக்கு இடையீட்டின் வகைகளாவன-தலைவி தன் உடன்
போக்கினைப் பாங்கியருக்கும் செவிலிக்கும் தெரிவிக்கச் செய்தலும்,
தமர்பின் தொடர்ந்து வருதலைத் தலைவி தலைவற்கு அறிவித்தலும்,
தலைவன் தலைவியை விடுத்து நீங்கலும், கண்டோர் இந்நிலைக்கண்டு
இரங்குதலும், தலைவி தமரொடு மீடலும் ஆம்.
வீட்டினை விட்டுத் தலைவனோடு உடன்போக்கிற்காக நீங்கிச்செல்லும்
தலைவி தன்தோழியருக்குத் தன் உடன்போக்