பக்கம் எண் :

 அகத்திணையியல் - நூற்செய்தி                               79


 

 கினை உணர்த்திவிடுத்தலும், தன்உடன்போக்கினை நற்றாய்க்கு உணர்த்தி
 விடுத்தலும், தலைவியால் கூறி விடுவிக்கப்பட்ட அந்தணர் நற்றாயிடம்
 தலைவி தலைவனுடன் போயின செய்தியைக் கூறுதலும், நற்றாய் தந்தை
 தன்னையர்க்கு அறத்தொடு நிற்றலின் தலைவி செயலைப்பொறாத அவள்
 தமர் அவரைப் பின்தொடர்ந்து சேறலும், அதனைக் கண்டோர் இரங்கிக்
 கூறுதலும், தமர் பின்தொடர்ந்து வருதலைத் தலைவி தலைவற்கு
 உணர்த்தலும்,  தலைவிதமருக்கு ஊறு செய்தல் ஆகாது என்ற கருத்தான்
 தலைவன் தலைவியை விடுத்து மறைதலும், தமரொடு மீண்டுசெல்லும் தலைவி
 தலைவன் புறங்காட்டிச் செல்லுதலைக்கண்டு கவலையுற்றுக் கூறுதலும் உடன்
 போக்கு இடையீட்டின் விரிகளாம்.

     உடன்போய்த் தன் ஊரின்கண்ணே தலைவியை மணத்தலும்,
 மீண்டுவந்து தன் மனையின்கண்ணே அவளை மணத்தலும் ஆகிய
 இரண்டையும் தவிர, ஏனைய எல்லா மணங்களிலும் தலைவன்  அந்தணர்
 களையும் சான்றோர்களையும் முன்னிட்டுத் தலைவிக்கு அருங்கலம்
 கொடுத்து அவளை மணத்தலே உலகியற்கையாம்.

கற்பு


  நிறுத்தமுறையானே, களவு என்றும் கைகோள் உணர்த்தியபின், அதன்
 முடிவில் நிகழற் பாலதாய வரைவு பற்றியன எல்லாம் உணர்த்தி அடுத்துக்
 கற்பு என்றும் கைகோள் உணர்த்தப்படுகிறது. கற்பாவது இல்வாழ்க்கையில்
 மகிழ்தலும், தலைவி தலைவனோடு ஊடுதலும், தலைவன் அவ்வூடலை
 நீக்குதலும், ஓதல்-நாடுகாவல்-நண்பனுடைய பகைவரைத் தணித்தல்-தூது-
 பொருள்-ஆகியவை காரணமாகத் தலைவியைப் பிரிந்து செல்லுதலும், பிறவும்
 ஆம்.

கற்பின் கிளவித்தொகை

     இல்வாழ்க்கை, பரத்தையிற்பிரிதல், ஓதற்குப்பிரிதல்,
 நாடுகாத்தலுக்குப்பிரிதல், தூதிற்குப்பிரிதல், நண்பனுக்கு