பக்கம் எண் :

 8                             இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 செவிலி நற்றாய்க்கு வெளிப்படையாக அறத்தொடு நிற்பாள் என்பது.

....

47

 நற்றாய், தந்தைதன்னையருக்குக் குறிப்பாக அறத்தொடு நிற்பாள்
  என்பது.


....


48

 பாங்கி தலைவியையும், செவிலி பாங்கியையும் வினவுவர்; தலைவியை
  உற்றுநோக்கி அவளிடத்து வேறுபாடு கண்டவழித் தோழியை
  நற்றாயும் வினவுவாள் என்பது.



....



49

 தலைவி தலைவனுடன் போயவழித் தோழி செவிலி நற்றாய் மூவரும்
  சேர்ந்து அறத்தொடுநிற்பர் என்பது.


....


50

 கற்பாவது களவின் வழிவந்த கற்பு, களவின் வழிவாராக் கற்பு என
  இருதிறப்படும் என்பது.


....


51

 குரவரால் புணரும் வதுவைப் புணர்ச்சியும், வாயில்களால் புணரும்
  ஊடல்நீக்கிப புணரும் புணர்ச்சியும் என்று கற்பின்புணர்ச்சி
  இருவகைப்படும் என்பது.



....



52

 களவின் வழிவந்த கற்பின்கூட்டம், உடன்போய் வரைதலான் உறவினர்
  இன்றியும் நிகழும் என்பது.


....


53

 களவு கற்பு என்ற இருகைகோளினும், தலைவற்குக் களவுப்புணர்ச்சியும்
  திருமணப்புணர்ச்சியும் உண்டு என்பது.


....


54

 காதல்பரத்தையர், காமக்கிழத்தியர், பின்முறைமனைவியர் என்ற
  மூவரும் கற்புக்காலப் புணர்ச்சிக்கு உரியர் என்பது.


....


55

 காதற் பரத்தையர் களவுப்புணர்ச்சிக்கே உரியர் என்பது.

....

56