வரவில்லையே என்று தலைவி வருந்திக் கூறுதலும், தலைவன் அன்பின்றித்
தன்னைப் பிரிந்தமைக்குத் தலைவி வருந்திக் கூறலும் வரவும்பெறும்.
உணர்த்த உணரா ஊடல்
தலைவன் தலைவியைப் பலவாறு வேண்டவும், அவள் தன் ஊடல்
தணியாது காலம் தாழ்க்கும் திறன் கூறுவது.
தான் புதல்வனைப் பெற்றமையைத் தலைவனுக்கு அறிவித்தற்குத்
தலைவி வெண்மலர் முதலியவற்றை அணிந்து கொண்ட சேடி ஒருத்தியைப்
பரத்தை இல்லத்தில் இருந்த தலைவன்பால் விடுப்ப, அது கண்ட தலைவன்
பரத்தையின் இல்லத்தை நீத்துத் தனது இல்லம் அடைந்து தான்
தலைவியைப் பார்க்கும்படி செய்தற்குத் தோழியைத் தூதாக வேண்டுதலும்,
தலைவி ஈன்ற அணிமை தீர்ந்து நெய்யாடிய செய்தியைத் தலைவனுக்குத்
தோழி தெரிவித்தலும், தலைவன் புதல்வனும் தானுமாய் இருக்கும்
தலைவியைக்காணும் வாய்ப்புக் கிட்டியமைக்குத் தன்உள்ளத்தில் மகிழ்ச்சி
மிகுதலும், தலைவன் தம்இல்லத்துக்கு வந்துள்ள செய்தியைத் தோழி
தலைவிக்கு உணர்த்துதலும், தலைவன் வருகையை உணர்ந்த தலைவி
தலைவனிடம் ஊடல்கொள்ளுதலும், பாணன் தலைவனுக்குப் பரிந்துரை கூறி
வாயில்வேண்டிவரத் தலைவி மறுத்தலும், வாயில் மறுக்கப்பட்ட பாணன்
மீண்டும் வேண்டலும், தலைவி பாணனைப் பழித்து மறுத்துரை கூறலும்,
விறலி கூத்தர் பாங்கி முதலியோர் வாயில்வேண்டி மறுக்கப்படுதலும்,
தலைவன் விருந்தினன் ஒருவனை அழைத்து இல்லத்துப் புக்கவழி
இல்லறத்திற்கு ஏற்பத் தலைவி விருந்தினன்முன் தனது புறத்தொழுக்கம்
பற்றிய வெகுளியைப் பொறுத்துக் கொண்டமை கருதித் தலைவன் மகிழ்தலும்,
விருந்துகண்டு ஒளித்த ஊடலைஉடைய தலைவி பாயலில்மிக்க ஊடலொடு
இருத்தலைநோக்கித் தலைவன் வருந்துதலும், தலைவி தன்னை வெகுளாதபடி
அவள் சீறடிகளில் தலைவன் தொழுதலும், தலைவன் தன்அடி தாழ்தலைப்
பரத்தையர்கண்டால்