தலைவன் கூற்றையும் தலைவி கூற்றையும் பார்ப்பார் முதலிய பதின் மரும், பார்ப்பான் கூற்றையும் அறிஞர் கூற்றையும் தலைவன் முதலிய அனைவரும் கேட்பர்.
பலவும் ஒருவழிப்பட்டு ஓர்இலக்கணத்தான் முடியும் கருமநிகழ்ச்சிகளாகிய இயற்கைப்புணர்ச்சி, வன்புறை முதலிய கிளவித்தொகைகள் இடம் எனப்படும். எனவே, இடம் என்பது சந்தருப்பமாம்.
இறப்பு நிகழ்வு எதிர்வு என்ற முக்காலத்துப் பொருள் நிகழ்ச்சியையும் கூறுதல் காலமாகும்.
'இதனால் இது மிகவும் பயன்படும்' என்று தொகுத்துச் சொல்லப்படும் பொருள் பயன் எனப்படும்.
இன்ன இடத்து இன்ன சொல்லைக் கூறுதற்குஉரியாரும் கேட்டற்கு உரியாரும் இன்னார் என்று அறியுமாறு குறிப்பிடுவது முன்னம் எனப்படும்.
அறிவான் மிகவும் ஆராய்ந்து உணர்தல் வேண்டாது நிகழ்கின்ற பொருளை உடலின்கண் நிகழும் கண்ணீர் அரும்பல் மெய்ம்மயிர் சிலிர்த்தல் - முதலிய வேறுபாடுகளால் தெரிவிப்பது மெய்ப்பாடாகும். அம்மெய்ப் பாடுகள் நகை அழுகை இளிவரல் வியப்பு அச்சம் வீரம் வெகுளி உவகை என்று எட்டு வகைப்படும். எள்ளல் இளமை பேதைமை மடன் என்ற நான்கும் நிலைக்களமாக நகை
|
|
|
|