காமக்கிழத்தியும், பின்முறைமனைவியும் திருமணப்புணர்ச்சிக்கு உரியர் என்பது. |
|
|
பரத்தை, ஓதல், காவல், தூது, உதவி, பொருள் இவை குறித்துக் கற்பிற் பிரிவு நிகழும் என்பது. |
|
|
அப்பிரிவுகளில் தலைவன் அயல்மனை, அயல்சேரி, ஊர்ப்புறம் இவற்றிற்குப் பிரிவான் என்பது. |
|
|
காமக்கிழத்தியர் பொருட்டாக அயல்மனைக்குத் தலைவன் பிரிவான் என்பது. |
|
|
பின்முறைமனைவி, பரத்தை இவர் காரணமாகவும், விழாக் காரணமாகவும் அவன் அயற்சேரிக்குப் பிரிவான் என்பது. |
|
|
புதியளாகிய பரத்தையைத் தேர்மிசை ஏற்றிக்கொண்டு இளமரக்காவில் விளையாடற்கும் புனல்ஆடற்கும் அவன் நகர்ப்புறத்திற்குப் பிரிவான் என்பது. |
|
|
அம்மூன்று பிரிவின்கண்ணும் தலைவிக்குத் தலைவன் பால் ஊடல் ஏற்படும் என்பது. |
|
|
பாணன் முதல் விருந்தினன் ஈறாய ஒன்பதின்மரும், ஆற்றாமையும் தலைவியின் ஊடல் தீர்க்கும் வாயில்கள் என்பது. |
|
|
ஓதற்பிரிவு அந்தணர் அரசர் வணிகர் ஆகிய மூவருக்கும் உரித்து என்பது. |
|
|
வேதம்ஓதுதல் அல்லாத கல்வி நான்கு வருணத்தாருக்கும் உரித்து என்பது. |
|
|