உள்ளுறை உவமம் செய்தியை வெளிப்படையாகக் கூறாது, பறவை
விலங்கு முதலிய உபமானங்களைக் கொண்டே உபமேயமாகிய பொருளைக்
குறிப்பான் அறியும் வகையில் வெளிப்படும்.
வெளிப்படை உவமமாவது வினையானும் பயனானும் வடிவானும்
நிறத்தானும் உபமானத்தைக் கொண்டு உபமேயத் தன்மையைப்
பெறப்படவைக்கும்.
இறைச்சி
இறைச்சியாவது கருப்பொருள்களைக்கொண்டு நேராக உணரப்படாது
கூறப்பட்ட செய்தியின்புறத்தே குறித்து உணரப்படுவதாகும்.
சிறப்புடைய கைக்கிளை
காமம் சாலாத இளமைப் பருவத்தாள் ஒருத்தியிடம் முதிய தலைவன்
ஒருவன், மருந்து பிறிதில்லாப் பெருந்துயர் எய்தி, தான் தக்கவன் எனவும்,
அவள் தன்னை வருத்தினாள் எனவும் கூறி, அவள் மறுமாற்றம் எதனையும்
தான் பெறானாய், இங்ஙனம் அவளைப்பற்றிப் பேசுவதனாலேயே தான்
மகிழ்வது. இஃது எஞ்ஞான்றும் கைக்கிளையாகவே இருக்கும் சிறப்புடைய
கைக்கிளையாம். இத்தகைய கைக்கிளை தலைமைப்பாடு இல்லாதாருக்கும்
இழிகுலத்தாருக்குமே உரியது. மேலும், புலனெறி வழக்கில் இதுபயின்று
வாராது அருகியே வரும் என்பதும் கொள்ளப்படும்.
பெருந்திணை
தலைவன் மடல் ஏறுதலும் வரைபாய்தலும், தலைவி தலைவற்கு
ஒத்தபருவத்தளாதல் - தலைவன் தலைவியினும் மிகவும் முதியவனாதல் -
தலைவன் தலைவி ஆகிய இருவரும் முதுமைப் பருவத்தும் துறவு உள்ளம்
சிறிதும் இன்றிக் காம