இடம்பெறினும் அவற்றான் பாடலைப் புறப்பாட்டாகக் கொள்ளாமல்
அகப்பாட்டாகவே கோடல்வேண்டும்.
இந்நூலில் அகப்பொருளுக்குக் கூறப்பட்ட இலக்கணங்களேயன்றி
வேறுபிற சான்றோர் செய்யுட்கண்வரினும், அவற்றையும் கூறப்பட்டன
கொண்டு உணர்ந்து ஆங்காங்கு அடக்கிக்கொள்ளுதல் நற்பண்புடையார்
கடனாகும்.