கொடும்புறம் வளைஇய கோடிக்
கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர்புறம் தழீஇ
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப
அஞ்சினள் உயிர்த்த காலை யாழநின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரைஎன
இன்னகை இருக்கைப் பின்யான் வினவலின்
செஞ்சூட்டு ஒண்குழை வண்காது துயல்வர
அகம்மலி உவகையள் ஆகி முகன்இகுத்து
ஒய்யென இறைஞ்சி யோளே மாவின்
மடங்கொள் மதைஇய நோக்கின்
ஒடுங்குஈர் ஓதி மாஅ யோளே.
அகநா. 86
இதனுள், வதுவைக்கு ஏற்ற கரணங்கள் நிகழ்ந்தவாறும் தமர் கொடுத்தவாறும்
காண்க.
[உழுந்தைக்கூட்டி அமைத்த கும்மாயத்தை வதுவைக்கு வந்தார்
அனைவரும்
பேரொலியோடு உண்ணவும், பல
கால்களை உடைய பெரிய
தண்ணிய
பந்தரில் புதுமணல் பரப்பி, வீட்டை விளக்குகளாலும்
மாலைகளாலும்
அணி
செய்து, இருள் நீங்கிய உரோகணியோடு சந்திரன்
கூடிய அச்சிறந்த
நாளிலே,
நிறைகுடங்களையும்
நீர் நிறைந்த
மண்டைகளையும் ஆரவாரம்
மிக்க
மூதறிவுடைய சிறந்த பெண்டிர் முற்படக்
கொடுப்பனவற்றையும்
பிற்படக்
கொடுப்பனவற்றையும் முறையாகத் தரவும்,
பிள்ளைகளைப் பெற்ற
பெருமாட்டியராகிய மங்கலமகளிர்
நால்வர் கூடித்
தலைவி தலைவன்
கற்பித்தவாற்றினின்றும் வழுவாதிருத்தலுக்கு உரிய நல்ல
பல
உபதேசங்களைச் செய்து ‘என்றும் கணவனால் விரும்பப்படும்
மனைவியாக
இருப்பாயாக' என்று கூறி
நீரோடு அலரிப் பூவினையும்
நெல்லையும் அவள்
கூந்தலில் தெளிப்ப, திருமணச் சடங்குகள் யாவும்
நிகழ்ந்த
பிறகு,அற்றைஇரவு ஆரவாரம் உடைய உறவினர் அனைவரும்
விரைவாகப்
|