3, தலைவிதமர் தலைவன் விடுத்த
சான்றோரை எதிர் கொண்டு
தலைவனுக்குத் தலைவியை மணம்செய்து கொடுப்பதற்கு இசைந்த
செய்தியைத்
தலைவிக்குத் தோழி உணர்த்துதல்.
4, தலைவி மகிழ்ச்சி தாங்காமல் மனத்திற்குள்ளேயே சொல்லிக்
கொள்ளுதல்.
5, தலைவன் வரைவிற்கு ஆவன செய்தமை கண்ட பாங்கி தலைவனை
வாழ்த்துதல்.
6, தலைவி தலைவனோடு தன் திருமணம் இனிதின் ஈடேறுமாறு
தெய்வத்தை வழிபட்டுக் கொண்டிருந்த காட்சியைத்
தோழி
தலைவனுக்குக் காட்டுதல்.
7, தலைவி தெய்வத்தை வழிபடும் காட்சியைக் கண்ட தலைவன் மகிழ்ச்சி
அடைதல்.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும்--
ந. அ. 174
‘முலைவிலை விடுத்தமை முகிழ்நகைக்கு இகுளை
உலைவின்று உணர்த்தலும் ஒண்ணுதல் நற்றாய்
உள்ள மகிழ்ச்சி உள்ளலும் பாங்கி
தமர்வரைவு எதிர்வர்எனத் தையற்கு உணர்த்தலும்
உவகை ஆற்றாது உளத்தொடு கிளத்தலும்
இறைவனை இகுளை வாழ்த்தலும் இறைவி
கடவுளைப் பராநிலை காட்டலும் கண்டோன்
உரைபெற மகிழ்தலோடு ஒன்றிய ஏழும்
வரைவு மலிதற்கு வாய்ந்த விரியே’.
மா. அ. 70]
68
|