பக்கம் எண் :

544இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

ஒருங்கு கூறப்பட்ட எல்லாக்கிளவியும் களவொழுக்கம் வெளிப்படாது நின்ற
இடத்து அறத்தொடு நிற்றலின் விரியாம் என்றவாறு.

விளக்கம்

      இந்நூற்பாவில் தலைவி அறத்தொடு நிற்குமாறும் தோழி அறத்தொடு
நிற்குமாறும் இணைத்துக் கூறப்பட்டுள்ளன.

      தோழி அறியாமல் களவுப்புணர்ச்சி நிகழ்த்தித் தலைவி அவளிடம்
அறத்தொடு நிற்குமாறு என்னைஎனின்,

      இயற்கைப்புணர்ச்சி புணர்ந்தானும் பாங்கற்கூட்டம் கூடியானும்
தெருண்டு வரைதல்உற்ற தலைவன், மகட்பேசத் தமரை விடும்;
விட்டவிடத்துத் தலைவிதமர் மகட்கொடைக்கு மறுப்ப, அஃது இலக்கணம்
ஆகலான்.அங்ஙனம் மறுத்தவிடத்துத் தலைமகள் வேறுபடும், ‘எம்பெருமான்
மறுக்கப்பட்டமையால் மற்றொருவாறாங் கொல்லோ’ எனக்கலங்கி வேறுபாடு
எய்தினபொழுதே தோழிக்குப் புலனாம்; புலனாயினவிடத்து,
‘எம்பெருமாட்டி! நினக்கு இவ்வேறுபாடு எற்றினான் ஆயிற்று?’ என்னும்,
என்றவிடத்து, ‘இஃது எனக்குப்பட்டது; இன்னவிடத்து ஒருஞான்று நீயும்
ஆயங்களும் தழையும் கண்ணியும் கோடற்கு எண்ணிச் சிறிது நீங்க, யான்
நின்று ஒருமணிச் சுனை கண்டேன்; கண்ட அம்மணிச்சுனைதான் ஆம்பலே
குவளையே நெய்தலே தாமரையே என்ற இப்பூக்களான் மயங்கி
மேதக்கதுகண்டு, வேட்கையான் ஆடுவான் இழிந்தேன்; இழுக்கிக்
குட்டம்புக்கேன்; புக்குத் ‘தோழியோ’ என, நீ அங்ஙனம் கேளாய்
ஆயினாயாக, ஒருதோன்றல் தோன்றிவந்து, எனது துயர் நீங்குதற்காகத்
தன்கை நீட்டினான்; நீட்டினவிடத்து மலக்கத்தான் நின்கை எனப் பற்றினேன்; வாங்கக் கரைமேல் நிறீஇ நீங்கினான்; நீ அன்று கவலுதி
எனச்சொல்லேன் ஆயி