னேன்; நீ எவ்வெல்லைக்கண்ணும் கைவிடாதாய், அவ்விடத்துக்
கைவிடலினை ஆக்கிற்று வீதி ஆகாதே!
இனிப் பிறிது ஒன்றாங்கொல்
என்று
கலங்கி வேறுபட்டேன்’என்று தோழிக்குத் தலைமகள்
அறத்தொடுநிற்கும்.
அங்ஙனாயின், தோழி காவலொடு மாறுகொள்ளாதோ எனின்,
கொள்ளாது;
தோழிக்கு அறத்தொடு நிற்கும்
ஆகலின் என்பது. காவலொடு
மாறுகொள்ளினும் ‘காவல் குற்றப் பட்டேன்’ என்று தோழி இறந்துபடாமல்
காக்கும் விதிஎன்பது, அஃதேஎனின், நிகழ்ந்த ஒழுக்கம் மறைத்துக் களைந்து
படைத்து மொழிந்தமையான்
பொய் உரைத்தலாகும் பிறஎனின், பொய்
உரைக்கப்பட்டது ஆகாது; என்னை? பழியும் பாவமும் அதனால்
வாராமையின்; என்னை?
‘பொம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.’
குறள்.292
என்றார் ஆகலின், குற்றம் இன்று என்பது.
இறை. அக.29
இனி, தோழி அறத்தொடு நிற்குமாறு,
‘தோழிக்கு உரியவை கோடாய் தேஎத்து
மாறுகோள் இல்லா மொழியுமார் உளவே.’
இறை. அக.14
என்ற நூற்பாவில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
தோழி சொல்லுதற்கு உரியன செவிலித்தாய்மாட்டு
மாறுகொள்ளாமைச்சொல்லும் சொற்களும் உள என்றவாறு.
எவற்றினொடு மாறுகொள்ளாமையோ? எனின், தாய் அறிவினொடு
மாறுகொள்ளாமையும், தலைமகள்
பெருமையொடு மாறுகொள்ளாமையும்,
தலைமகளது கற்பினொடு
69
|