|
மாறுகொள்ளாமையும், தோழிதனது
காவலொடு மாறுகொள்ளாமையும்,
நாணினொடு மாறுகொள்ளாமையும், உலகினொடு மாறுகொள்ளாமையும்
எனக்கொள்க.
‘காப்புக் கைமிக்குக் காமம் பெருகுதல்’ இறை அக. 29 முதலிய
நான்கு
இடத்தும் தலைவிக்கு வேறுபாடு
உண்டாம். அஃது எப்பொழுது
உண்டாயிற்று, அப்பொழுதே தோழிக்குப் புலனாம்; என்னை? தான் அவள்
என்னும் வேற்றுமை இலள் ஆதலின். அவ்வாறு ஆயினவிடத்துத் தோழி
“எனக்குப் புலனாயினவாறே போல
யாய்க்கும் புலனாயினஞான்று வாளா
ஒழியாள், அறிவாரை வினாவும்; வினாயினஇடத்து வினாவப்பட்டார்
தெய்வத்தினான் ஆயிற்று என்ப; என்னை? பிறிது ஒன்று சுட்டி உணரும்
தன்மைத்து அன்று இக்குலம்
ஆகலானும், அதுவே சொல்லுதல்பயத்தது தம்
கருமம் ஆகலானும், அறியாரே ஆயினும் சொல்லுப. சொல்ல,
தாய்
தெய்வத்திற்கு வழிபாடு செய்விக்கும்; செய்விக்க, தலைமகளுக்குக் கற்பு
அழியும்; என்னை?
தன் தலைமகனையன்றிப் பிறிது ஒரு தெய்வத்தை
வணங்காள், பத்தினி ஆகலின்; தெய்வத்தை வணங்கக்
கற்பு அழியும் என்று
தலைமகள் ஆற்றாளாம்.
அல்லதூஉம், ஒழுக்கக் குறைபாடு நீங்கி வாராநின்ற தொல்குலம்
மணிக்கலம்
கதுவாய்ப்பட்டது போல
யான் தோன்றி, இவ்வகை
அணங்காட்டு அறியாது
அணங்காட்டு எடுத்துக்கொள்ளப்பட்டது எனவும்,
யான் உற்றது நிரம்பற் பாட்டினாலும் வேலன் தனது
வெறியாட்டுவலத்தினாலும் எம்பெருமானை
அவ்வெறிக்களத்துக்
கொண்டுவருங்கொல்லோ? என்னும் பேரச்சத்தினாலும்,
எம்பெருமானை
அவ்வெறிக் களத்துக் கொண்டுவருகல்லாது
என்கண் நின்ற
வேறுபாட்டைப் புறத்தார்க்குப் புலனாகாமை மறைப்பது கொல்லோ
எனவும்,அங்ஙனம்
மறைத்ததனைக் கேட்ட எம்பெருமான் ‘என்னினாய
|