பக்கம் எண் :

அகத்திணையியல்--நூற்பா எண் 161547

வேறுபாடு பிறிது ஒன்றினானும் நீங்கும்போலும்!’ என்று உட்கொள்ளும்
எனவும் தலைமகள் ஆற்றாளாம்“ என்று தோழி ஆற்றாளாம்.

        “ஆற்றாளாயினாளது ஆற்றாமை ஆற்றுவது ஒன்றனைப் பற்றும்;
ஆற்றுவது பிறிது இன்மையின் யாய் அறிவாரை வினாவும்இடத்து என்னை
வினாவும்; வினாவ, ‘யான் அறியேன்’ என்றதன் புறத்தாம் பிறரை
வினாவுவது; அங்ஙனம் என்னை வினாவினவிடத்து இனி யாது
சொல்லுவேன்?“ என்று கூட்டம் இல் நாட்டவகையால் சிந்தித்துக்
கொண்டிருந்தாள். இருந்த நிலைமைக்கண், தாய் பிற்றைஞான்று சிறுகாலை,
படிமக்கலத்தொடும் புக்காள், மகளை அடியிற்கொண்டு முடிகாறும்
நோக்கினாள். நோக்கி, ‘அன்னாய்! என்மகள் பண்டையள் அல்லளால்;
இவ்வேறுபாடு எற்றினான் ஆயிற்று? நின்னால் அறியப்படுவது; உண்டோ?’
என்னும்; என்றவிடத்து, "இவள், அன்றுகொண்டு என்னாலும் சிறிது உண்டு
அறியப்படுவது; யாதோ எனின், எம்மைக் கூழைக் கற்றைக்
குழவிப்பிராயத்து மாழை கலந்த ஏழை நீர்மையாரொடு நாள்கோலம் செய்து
விளையாடி வம்மின் என்று போக்கினாய்; போக்கினவழி, யாம்போய், ஒரு
வெண்மணல் பரந்த தண்மலர்ப் பொழிலிடை விளையாடி நின்றேமாக, ஒரு
தோன்றல் இரு சுனைக் குவளைப்பூக்கொண்டு அவ்வழியே போந்தான்;
போதர, நின்மகள் அவனை நோக்கி, ‘அப்பூவினை எம்பாவைக்கு
அணியத்தம்மின்’ என்றாள். அவனும் பிறிது சிந்தியாது கொடுத்து
நீங்கினான்; இஃது அறிவது அறியாக் காலத்து நிகழ்ந்தது“ என்னும்.

        இ்ஃது அறிவது அறியாக் காலத்து நிகழ்ந்ததனை அறிவது
அறிந்து, கொண்டார்க்கு உரியர் கொடுத்தார்’ என்பதும் ‘உற்றார்க்கு உரியர்
பொற்றொடிமகளிர்’ என்பதும் நினைத்து, அவனை வழிபடாது பிறிதோர்
ஆறு ஆவதாயின் இக்குலத்துக்கு வடுவாம்கொல்லோ? என்று கருதினமை