பக்கம் எண் :

548இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

யான், நின்மகள் வேறுபட்டது” என்னும். எனவே, தாய் அறிவினொடு
மாறுகொள்ளதாயிற்று: என்னை? ‘விளையாடிவம்மின்' என்றமையின். இனி,
பெருமையொடு மாறுகொள்ளதாயிற்று, அக்காலத்து நற்செய்கை செய்ததனை
இக்காலத்து நினைந்தமையின். இனி, கற்பினொடு மாறுகொள்ளதாயிற்று,
‘இவ்வாறன்றிப் பிறிது ஓராறு ஆயினஇடத்துக் குடிக்கு வடுவாம்’
எனக்கருதினமையின். இனி, தன் காவலொடு மாறுகொள்ளதாயிற்று,
இருவரும் இருந்த நிலைமைக்கண் நிகழ்ந்தது என்றமையின். இனி,
நாணினொடு மாறுகொள்ளாதாயிற்று, அறிவது அறியாக் காலத்து
நிகழ்ந்தமையின். இனி, உலகினொடுமாறுகொள்ளாதாயிற்று, ‘உற்றார்க்கு
உரியர் பொற்றொடி மகளிர்’ என்றமையின், இது மாறுகோள் இல்லா
மொழியாய் நிகழ்ந்தவாறு, இது பூத்தரு புணர்ச்சி. களிறுதரு புணர்ச்சிக்கும்,
புனல்தரு புணர்ச்சிக்கும் அவ்வாறே உரைத்துக்கொள்க.


துறை விளக்கம்:
 

1,  தலைவின் செயலற்ற நிலையைக்கண்டு தோழி அவளது கண்ணீரைத்
   துடைத்து, அவள் மனம் வருந்துதற்கு உரிய காரணத்தை வினவுதல்.


2,  தலைவன் ‘ நின்னின் பிரியேன்; பிரியின் ஆற்றேன்’ எனத் தெய்வத்தை
   முன் நிறுத்தி உறுதி கூறித் தெளிவித்த சொற்களை உண்மை என்று
   தேறியதால் தனக்கு இந்நிலை உண்டாயினவாற்றைத் தலைவி
   தோழிக்குக் கூறுதல்.

 

3,  தலைவன் தன்னைப் பிரிந்து சென்றுவிட்ட செய்தியைத் தலைவி
   தோழியிடம் கூறுதல்.


4,  தோழி ‘தலைவன் தக்கவன் அல்லன்’என்று அவனைப் பற்றி குறை
    கூறியவிடத்துத் தலைவி அவன் தக்கவனே என்று அவன் பண்பு
    நலன்களைப் பாராட்டிக் கூறல்.