பக்கம் எண் :

அகத்திணையியல்--நூற்பா எண் 161549

5,  ‘தலைவன் செய்த தவற்றிற்காக அவனைத் தண்டிக்காதவாறு
   பொறுத்துக்கொள்ளுமாறு தெய்வத்தை வேண்டுதற்குச் செல்வோம்’
   என்று தலைவி தோழியிடம் கூறுதல்.


6,  தன்னைத் தாய் இற்செறிந்த செயலைத் தோழியிடம் தலைவி கூறுதல்.


7,  செவிலித்தாய் முதல்நாள் செறிந்த இருளில் தலைவன் இரவுக்குறிக்கு
   வந்தபோது அவனைக் கண்டுவிட்டாள் என்ற செய்தியைத் தலைவி
   தோழிக்குக் கூறுதல். இவை தலைவி கூற்று.


8,  தலைவின் உடல் வேற்றுமையின் காரணத்தைத் தாய் வினவியவழித்
   தோழி விடைஇறுத்தல்.


9,  வெறியாட்டைத் தோழி விலக்கியவழி, தாய் அதன் காரணத்தை
   வினவியவிடத்துத் தோழி கூறுதல்.


10, ‘தலைவன் தலைவிக்குப் பூத்தந்து அவள்மனத்தில் இடம் பெற்றான்;
   யானை தாக்காது தலைவியைப் பாதுகாத்தான்; நீரில் மூழ்காது அவளைக்
   காத்துக் கரை சேர்த்தான்’ எனத் தலைவனும் தலைவியும் சந்திப்பதற்குப்
   பூ,களிறு, புனல் இவை ஏதுவாயினவாற்றைத் தோழி தாயிடம் கூறல்-

   இவை தோழி கூற்று.


11,  தலைவின் உடல்வேறுபாடுகண்டு அதன் காரணத்தை நற்றாய் 
   வினவியவழி, செவிலி நேரிடையாகத் தான் தோழி வாயிலாக
   அறிந்தவற்றை நற்றாய்க்குக் கூறுதல்.

    இவை தலைவி அறத்தொடு நிற்றல், தோழி அறத்தொடு நிற்றல்,
    செவிலி அறத்தொடு நிற்றல் என்ற முப்பிரிவிற்றாய அறத்தொடு
    நிற்றலின் விரியாம். நற்றாய் குறிப்