பொய்என மொழிதலும் பொன்றத் துணிதலும்
கையன்று என்றலும் காரிகை நேர்தலும்
பாங்கி வெறிக்கண் படர்க்கைமுன்னிலையும்
ஈன்றோள் தன்வயின் கைத்தாய் இயம்பலும்
வரைவுஎதிர் மறுத்தலும் மையலும் தெளித்தலும்
கிளந்த தமர்வயின் நற்றாய் கிளத்தலும்
இளையோற்கு எதிர்தலும் வெளிப்படை என்மனார்.’
த.நெ, வி.22
முழுதும்--
ந.அ. 176, 177, 178, 179.
தலைவி அறத்தொடுநிற்றல்:
‘கலுழ்தலின் பாங்கி கண்ணீர் துடைத்தலும்
கலுழ்தற் காரணம் கூறலும் கடவுளைச்
சூளுற்று உரைத்ததைத் துணிந்தமை சொல்லலும்
இகந்தமை இயம்பலும் இயற்பழித்து உரைத்தலும்
இயற்பட மொழிதலும் இறைவன் பொறைகொளச்
செல்குவம் என்றலும் சிறைபயில் இல்வயின்
செறித்தமை செப்பலும் செவிலி இறைவனைக்
கண்டமை கூறலோடு கருதிய ஒன்பதும்
ஒண்டொடி அறத்தொடு நிலைதனக்கு உரிய.’
மா, அ. 72
பாங்கி அறத்தொடுநிற்றல்:
‘காரிகை வேற்றுமைக் காரணம் வினாவினும்
வேரிகொள் வெறிவிலக் கியவழி வினாவினும்
போதொடு புனல்களிறு என்றுஇவை ஏதுவின்
ஆதரப் பாங்கி அறத்தொடு நிற்கும்’.
மா, அ. 73
‘அயலார் மணமுரசு ஆயிடை விலக்கலும்
கயல்விழிப் பாங்கி கடன்என மொழிப.’
மா, அ. 74
|