பக்கம் எண் :

அகத்திணையியல்--நூற்பா எண் 164565

    இஃது உடன்போக்கு விரி இத்துணைத்து என்கின்றது.

   (இ-ள்) பாங்கி தலைவற்கு உடன்போக்கு உணர்த்தல் முதலாகத்
தலைவன் தன்பதி அடைந்தமை தலைவிக்கு உணர்த்தல் ஈறாகச்
சொல்லப்பட்ட கிளவிகள் பதினெட்டும், பொருந்திய அன்பினை உடைய
உடன்போக்கு விரியாம் என்றவாறு.

   ‘ஒன்றிய அன்பின்' என்ற இலேசானே, தலைவி ஒருப்பட்டு எழுந்தவழி
அங்ஙனம் ஒருப்பட்டு எழுந்தமை பாங்கி தலைவற்கு உணர்த்தலும்,
கண்டோர் தம் பதி அணுமை சாற்றிய பின்னர்த் தலைவன் தன் பதி
அணுமை தலைவிக்குச் சாற்றலும், அவட்குத் தன் நகர் காட்டலும்,
தலைவன் தன் பதி அடைந்தமை தலைவிக்கு உணர்த்தியபின்னர்த்
தலைவியோடு தன்மனை சார்தலும் வரவும்பெறும்.
 


விளக்கம்


1,  ‘எமர் தலைவியை நீ வரைதற்கு உடன்படார்; ஆதலின், இவளை
   உடன்கொண்டு செல்க' எனப்பாங்கி தலைவனுக்கு அறிவித்தல்.

2,  தலைவியின் மென்மைத்தன்மை கூறி அவளை உடன் கொண்டு
   செல்லுதலைத் தலைவன் மறுத்துக் கூறுதல்.

3,  அங்ஙனம் போதற்குப் பாங்கி தலைவனை உடன்படச் செய்தல்.

4,   தலைவன் தலைவியை உடன்கொண்டு போதற்கு உடன்படுதல்.

5,   பாங்கி தலைவிக்குத் தலைவன் உடன்கொண்டு செல்லக் கருதுவதைக்
    கூறல்.

6,   தலைவனுடன் தமர் அறியாது தான் சென்றால் தன் நாணம்
    அழிந்துவிடுமே என்று தலைவி வருந்துதல்.