பக்கம் எண் :

566இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

7,‘  நாணினும் கற்பே சிறந்தது' என்பதனைப் பாங்கி தலைவிக்கு எடுத்துக்
    கூறுதல்.

8,  தலைவனுடன் செல்லுதற்குத் தலைவி உடன்பட்டு எழுதல்.

9,  சுரத்தின் இயல்பைப் பாங்கி உரைத்தவிடத்துத் தான் அதற்கு
   அஞ்சாமல் சுரம் செல்லத் துணிந்திருத்தலை அவளுக்குத் தலைவி
    கூறுதல்.

10,  தலைமகனிடம் தோழி தலைமகளை அடைக்கலப்படுத்திக் கூறல்.

11,   பாங்கி நடுயாமத்தில் தலைவியைத் தலைவனுடன் விடுத்தல்.

12,  தலைவன் தலைவியைப் பாலைநிலத்தில் மெல்லக்கொண்டு ஏகுதல்.

13,  சுரத்தில் பொழில் காணப்படுதல் அரிது ஆகலின் சோலையைக்கண்டு
    வியந்த தலைவன், தலைவி நடந்து வருதற்கண் இளைத்தலை அறிந்து
    அவளை அங்குத் தங்கி இளைப்பாறச் செய்தல்.

14,  தலைவன் மனமகிழ்வோடு தலைவிக்கு மலர்களைப் பறித்துச் சூட்டி
    மனம் மகிழ்ந்து இருத்தல்.

15, சுரத்திடை அவ்விருவரையும் கண்டோர் ‘இவர் தேவரோ? மானிடரோ?'
   என்று ஐயுறுதல்.

16,  ‘பொழுது போயிற்று; நீ்ங்கள் இனிப்போதற்கு இவ்வழி உரியது அன்று'
    என்று கண்டோர்கூறி, அவர்களை அன்புடன் விலக்குதல்.

17,  ‘ஊர் அருகில் உள்ளது' என்பதை அவர்களுக்குக் கண்டோர் கூறுதல்.

18,  தலைவன் தம் பதி வந்து சேர்ந்துள்ள செய்தியைத் தலைவிக்குச்
    சொல்லுதல்.