பக்கம் எண் :

568இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

மதிநுத லாளை வளர்த்தவள் கேட்டல்
அறத்தொடு நிற்றல் அதுகேட்டு அழுங்கல்
திறப்பாடு உன்னிச் செவிலிகவன்று உரைத்தல்
அடிநினைந்து இரங்கல் அதுதாய்க்கு உரைத்தல்
மடவரல் போக வாடி உரைத்தல்
கிளிமொழிக்கு இரங்கல் கிளர்சுடர்ப் பராய்தல்
அளிபெறு பருவத்திற்கு அவள்கவன்று உரைத்தல்
நாடத் துணிதல் நற்றாய் நயந்தவர்
கூடக் கரைஎனக் கொடிக்குறி பார்த்தல்
சோதிடம் கூறல் சுவடுகண்டு அறிதல்
ஏகமுற் றவைகண்டு இரங்கி உரைத்தல்
வேட்ட மாதரைக் கண்டு வினாவல்
புறவொடு புலத்தல் குரவொடு வருந்தல்
திறல்அருந் தவத்தொடு செல்லா நின்ற
மாவிர தியரை வழியிடை வினாவல்
வேதியர் தம்மை விரும்பி வினாவல்
புணர்ந்துஉடன் வருவோரைப் பொருந்தி வினாவல்
மணம்தரு குழலாள் மன்னிய நிலையொடு
வேங்கை பட்டது கண்டு வியத்தல்
ஆங்குஅவர்இயைபுஅணி அவட்குஎடுத்துஉரைத்தல்
மீள உரைத்தல் மீளாது அவளுக்கு
ஊழ்முறை இதுஎன உலகுஇயல்பு உரைத்தல்
அழுங்குதாய்க்கு உரைத்தல் ஐம்பதோடு ஆறும்
உழுங்கொலை வேலோன் உடன்போக்கு ஆகும்.'
திருக்கோவை.

மு. வீ. கள. 22


‘அலர்பெரிது என்றலும் அயல்வரைவு உரைத்தலும்
உலகியல் கூறி நீஉரை என்றலும்
சுரம்செல ஆற்றும் நிலனொடு என்றலும்
வருந்திறம் உரைத்தலும் வழநயப் பித்தலும்
விருப்பினன் நேர்ந்த பாவக் கிளவியும்
பொருந்தும் என்மனார் போக்குஉடன் வலித்தல்'

த. நெ. வி. 20