[இன்னும் இப்பெண் பேதைப்
பருவத்தைக்கூடக் கடந்தவள்
அல்லளாகத்
தோன்றுகிறாள். தன்னை விரும்பிய தன்காதற் கணவனுடைய
நட்பைக் காதலித்து, நடத்தற்கு அரிய
இக்கொடிய வெய்ய பாலையிலே
நடந்து வந்த
இப்பெண்ணைப் பெற்ற தாய் எவ்வாறு இவளைப் பிரிந்து
இன்னும் உயிர்
வாழ்கின்றாளோ?]
கண்டோர் காதலின் விலக்கல்:
எம்ஊர் அல்லது ஊர்நணி இல்லை
வெம்முரண் செல்வன் கதிரும் ஊழ்த்தனன்
சேர்ந்தனை சென்மோ பூந்தார் மார்ப
இளையள் மெல்லியள் மடந்தை
அரிய சேய பெருங்கல் ஆறே. சிற்றெட்டகம்
எனவும்,
[பூக்கள் தொடுத்த மாலையை அணிந்த மார்பனே!
இப்பெண்ணோ
இளையள்; மெல்லியள்; நீ செல்லக் கருதியுள்ள வழி
கடத்தற்கு அரிய
நெடியதான பெரிய கற்கள் மிடைந்த வழியாகும். சூரியனும்
மறையத்
தொடங்கிவிட்டான். எம் ஊரைத் தவிரப் பக்கலில் வேற்றூர்
எதுவும்இன்று,
ஆதலின் இன்று இங்குத் தங்கி நாளை நின் செலவைத்
தொடர்வாயாக.]
கண்டோர் தம்பதி அணுமை சாற்றல்:
மின்தங்கு இடையொடு நீவியன் தில்லைச்சிற் றம்பலவர்
குன்றம் கடந்துசென் றால்இன்று தோன்றும் குழூஉக்கமலம்
துன்றுஅம் கிடங்கும் துறைதுறை வள்ளைவெள் ளைநகையார்
சென்றுஅங்கு அடைகட மும்புடை சூழ்தரு சேண்நகரே.
திரு. 221
எனவும்,
[இத்தலைவியோடு நீ தில்லைச்சிற்றம்பலவனுடைய இக்குன்றினைக்
கடந்து
சென்றால், தாமரைகள் பூத்த கிடங்கு |