பக்கம் எண் :

அகத்திணையியல்--நூற்பா எண் 166583

   தெய்வம் வாழ்த்தலும்3 இவ்வொரு மூன்றும்
   செவிலி அறத்தொடு நிற்றலின் கவலையில்
   பாங்கி தன்னொடும்4 பாங்கியர் தம்மொடும்5
   அயலார் தம்மொடும்6 பயில்இடம் தன்னொடும்7
   தாங்கலள் ஆகிச் சாற்றிய நான்கும்
   நிமித்தம் போற்றலும்8 சுரம்தணி வித்தலும்9
   தன்மகள் மென்மைத் தன்மைக்கு இரங்கலும்10
   இளமைத் தன்மைக்கு உளம்மெலிந்து இரங்கலும்11
   அச்சத் தன்மைக்கு அச்சமுற்று இரங்கலும்12
   ஆகிய ஐந்தும் போகிய இறைமகள்
   ஆயமும் தாயும் அழுங்கக் கண்டு
   காதலின் இரங்கும் கண்டோர் இரக்கமும்13
   ஆற்றாத் தாயைத் தேற்றலும்14 ஆற்றிடை
   முக்கோல் பகவரை வினாதலும்15 மிக்கோர்
   ஏதுக் காட்டலும்16 எயிற்றியொடு புலம்பலும்17
   குரவொடு புலம்பலும்18 சுவடுகண்டு இரங்கலும்19
   கலந்துஉடன் வருவோர்க் கண்டுகேட் டலும்20 அவர்
   புலம்பல் தேற்றலும்21 புதல்வியைக் காணாது
   கவலைகூர் தலும்22 புதல்வியைக் காணாது
   கவலைகூர் தலும்22 எனும் இவைஒன் பானும்என்று
   இத்திறம் இயம்பிய எழுமூன்றும் ஒன்றும்
   கற்பொடு புணர்ந்த கவ்வையின் விரியே.


   இது கற்பொடு புணர்ந்த கவ்வையின் விரி இத்துணைத்து என்கின்றது.

   (இ-ள்) வினவிய பாங்கியின் உணர்ந்த காலை இனையல் என்போர்க்கு
எதிர் அழிந்து மொழிதல் முதலாகத் தெய்வம் வாழ்த்தல் ஈறாகச்
சொல்லப்பட்ட இவ்வொருமூன்றும்.

   செவிலி அறத்தொடு நிற்றலின் கவலையில் பாங்கிதன்னொடு புலம்பல்
முதலாகப் பயில் இடம்தன்னொடு புலம்பல் ஈறாகச் சொல்லப்பட்ட நான்கும்,