பக்கம் எண் :

584இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

     நிமித்தம் போற்றல் முதலாக அச்சத்தன்மைக்கு அச்சம் உற்று இரங்கல்
ஈறாகச் சொல்லப்பட்ட ஐந்தும்,

     போகிய தலைமகள் ஆயத்தாரும் நற்றாயும் இரங்குமாறு கண்டு
அன்பினான் இரங்கும் கண்டோர்க்கு இரக்கம் ஆகிய ஒன்றும்,

     ஆற்றத்தாயைத் தேற்றல் முதலாகப் புதல்வியைக் காணாது கவலை
கூர்தல் ஈறாகச் சொல்லப்பட்ட ஒன்பதும்,

     என்று இவ்வாறு கூறிய இருபத்திரண்டு கிளவியும் கற்பொடு புணர்ந்த
கவ்வையின் விரியாம் என்றவாறு

     அநுவாத முகத்தான், செவிலி பாங்கியை வினவலும், பாங்கி
செவிலிக்கு உணர்த்தலும், செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்றலும்
வரப்பெறும்.

     ஒன்றென முடித்தலான், செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நி்ற்றலின்
பின்னர் நற்றாய் தன்னுள்ளே இரங்கலும்,

     நற்றாய் பாங்கிதன்னொடு புலம்பலின் பின்னர்த் தோழி அழுங்க
நற்றாய் புலம்பலும்,

     அயலார்தம்மொடு புலம்பலின் பின்னர்த் தத்தையொடு புலம்பலும்,

     நிமித்தம் போற்றலின் பின்னர்த் ‘தலைவன் மிக அன்பு செய்க' என்று
தெய்வத்திற்குப் பராயதூஉம்,

     முக்கோற்பகவரை வினாதலின் பின்னர் மாவிரதியரை வினாதலும்,
அதன் பின்னர் உய்த்துணர்வோரை உரைமின் என்றலும்,

     குரவொடு புலம்பின பின்னர்ப் புறவொடு புலம்பலும் வரவும் பெறும்.