|
விளக்கம்
1, ‘என்மகள் எங்கே போயினாள்?' என்று செவிலி பாங்கியை
வினவியகாலை,
பாங்கி ‘நம்மவர் மணத்திற்கு உடன்படாமையால்
நின்மகள் தன்னுடைய
விருப்பத்தின்படியே தலைவனுடன் போயினாள்'
என்று செவிலித்தாய்க்குக் கூற, செவிலித்தாய் தன்னைத்
தேற்றுவோரை
நோக்கி மனம் நொந்து
வருந்திக்கூறல்.
2, ‘தலைவனுடன் போதலைத் தலைவி எனக்குக் குறிப்பால் அறிவித்தும்,
அதனை நான் அறிந்து கொள்ளவில்லையே' என்று செவிலி தன்
அறியாமை
காரணமாக நொந்து உரைத்தல்.
3, ‘தலைவியை விரைவில் மீண்டு வரச் செய்தல் வேண்டும்' என்று செவிலி
முருகக்கடவுளைத் துதித்தல்.
4, தன் கற்பின் மிகுதி தோன்றத் தலைவி தலைவன் ஒருவனுடன்
சென்றனள்
என்பதை நற்றாய்க்குச் செவிலி அறிவுறுத்தவே, நற்றாய்
தலைவியின்
உயிர்த்தோழியோடு தலைவியின் பிரிவை நினைத்து
வருந்தி உரையாடுதல்.
5, நற்றாய் தலைவியின் பிரிவு குறித்துத் தோழியர் ஏனையாரோடு
வருந்திப்
பேசுதல்.
6, தலைவியின் உடன்போக்குக் குறித்து நற்றாய் அயலாரோடு நொந்து
கூறுதல்.
7, தலைவி விளையாடும் இடங்களை நோக்கி நற்றாய் புலம்புதல்.
74
|