|
8, ‘என்மகள் மீ்ண்டு
வரும்படி நீ கரைவாயாயின் உனக்குச் சிறந்த
உணவை
அளிப்பேன்' என்று கூறி, நற்றாய் காக்கைக்குறி பார்த்தல்,
9, ‘என்மகள் சென்ற பாலைநிலத்தை மருதநிலமாகச் செய்யவேண்டும்'
என்று
நற்றாய் சூரியனை வேண்டுதல்.
10, ‘மலரை மிதிப்பினும் தளரும் என் மகளுடைய மெல்லிய அடிகள்,
பாலைநிலத்தின் வெம்மையை எவ்வாறு பொறுக்கும்?' என்று நற்றாய்
இரங்குதல்.
11, ‘என்மகள் உலகியலில் சிறிதும் பழக்கப்படாத இளமைத் தன்மை
உடையவள்; இவள் தலைவனோடு அமைதியாக யாங்கனம்
‘உடன்போய்ச் சேர்வாள்?' என்று நற்றாய்
வருந்துதல்.
12, தலைவியின் இயல்பாக உள்ள அச்சத்தன்மையையும் உடன்போக்கு
நிகழ்த்தும் சுரத்தின் இயல்பையும் நினைத்து, நற்றாய் ‘இவள் அஞ்சாது
தலைவனைத் தொடர்ந்து சென்றனளோ? என்று மனம் வருந்தி
உரைத்தல்.
13, தலைவியைப்பற்றி நற்றாயும் ஆயத்தாரும் கூறிய சொற்களைக்கேட்ட
அயலார் வருந்திப் பேசுதல்.
14, தலைமகளுடைய பிரிவினை ஆற்றாத நற்றாயைச் செவிலி தேற்றுதல்.
15, தலைவியைத் தேடி அவள் சென்ற திசையை நோக்கிச் சென்ற
செவிலித்தாய் வழியிலே மூன்று கோல்களை உடைய துறவிகளைக்
கண்டு
அவர்களிடம் தலைவிநிலைபற்றி வினவுதல்.
16, செவிலி சொற்களைக் கேட்ட அந்தணர் தலைவி தலைவனுக்கு
உரியவள்
ஆதல் உலக இயல்பு என்று காரணம் காட்டிக் கூறுதல்.
|