பக்கம் எண் :

அகத்திணையியல்--நூற்பா எண் 166597

              [தன்னைப் பெற்று வளர்த்த நற்றாய் செவிலித்தாயர் ஆகிய
எம்மையும் கருதாது, வான்அளாவிய மதிலைஉடைய எம் பெரிய இல்லம்
இவள் பிரிவால் தளிமைத்துயர் எய்த, ஒற்றைமணி அடிக்கும்

காம்பினைஉடைய வேற்படை ஏந்தியவராய்ப் பாலைநிலத்து ஊர்களை
அடைந்த மழவார்கள், பகை முனையில் பசுக்களைக் கவர்ந்து
மேட்டுநிலத்தில் வீழ்த்திய வில்லையே ஏராகக்கொண்டு பகைவர்உடலை

உழும் வாழ்க்கையினை உடைய வீரர்களைப் புதைத்த கல்மேட்டில்,
நடுகல்லில் கடவுளாகித் தங்கிய வீரர்களுக்கு வழிபாடு ஆற்ற, நடுகல்லிற்கு

மயிற்பீலி சூட்டித் துடிகொட்டி நெற்கள்ளோடு ஆட்டுக்கிடாயைப் பலியாக
வழங்கும், மக்கள போக்குவரத்து இல்லாத புலால்நாற்றம் வீசும் கடத்தற்கு
அரிய பாலைநிலம் சேறலைத் துணிந்து அயலவன் தொடர்பைக்கொண்டு

விட்டாள் ஆயினும், ஒலிநீங்காத முழவினைஉடைய கோவலூரின்
தலைவனும் நெடிய தேரை உடையவனும் ஆகிய காரி என்ற வள்ளலுடைய
கொடுங்கால் என்ற ஊர்த்துறையை உடைய பெண்ணையாற்றின் நுண்ணிய

கருமணலை ஒக்கும் வளைவுகளை உடைய கரியமயிர்முடியை உடைய
என்மகளுக்கு அவள் அறியாத பக்கத்து அழைத்துச் செல்லுதற்கு அமைந்த
துணையாகிய தலைவன், அவளுக்கு மலர் முதலியவற்றைப் பலகாலும்
அணிவித்து, விருப்பம் மிக்க நெஞ்சத்தொடு அவள் அழகை நுகர்ந்து, தன்
மார்பே துணையாக அவளை உறங்கச் செய்வதற்கு அருளல் வேண்டும்'
என்று செவிலி தெய்வத்தைப் பராயது.

        எம்மும் உள்ளாள் நகர்புலம்பச் சுரம்துணிந்து பிறள் ஆயினள்
ஆயினும் அவளை அறியாத் தேயத்து அழைத்துச் சென்ற துணைவன்

ஆர்வத்தோடு அணிந்து நலன் அளைஇ மார்பு துணையாகத் துயிற்றலை

யான்விரும்புகிறேன்-என்பது துறைச்செய்தி.]